வருமான வரித் துறை 2017-2018 நிதி ஆண்டுக்கான வருமான வரியினைத் தாக்கல் செய்யப் புதிய படிவத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய படிவத்தில் தனிநபரின் வருமான விவரங்கள் மற்றும் சொத்துக்களில் இருந்து வரும் வருவாய் குறித்த விவரங்களை எல்லாம் கேட்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கத்தில் வருமான வரி தாக்கல் செய்யக் கூடிய படிவமாக ஐடிஆர் 1 சஹாஜ் படிவம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படிவத்தின் மூலமாக ஆண்டுக்கு 50 லட்வம் ரூபாய் வரை வருவாய் உள்ளவர்கள் வரி தாக்கல் செய்ய முடியும்.
எனவே இந்தப் புதிய படிவத்தில் உள்ளிட வேண்டிய விவரங்கள் மற்றும் படிவம் குறித்து முக்கிய விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
படிவம் 16
வருமான வரி துறையின் புதிய படிவத்தில் அடிப்படை சம்பள விவரங்களைப் படிவம் 16-ல் உள்ளது போன்று அளிக்க வேண்டும் மற்றும் வீட்டு வாடகை அல்லது சொத்துக்கள் மூலமாகப் பெறப்படும் வருவாயினையும் இதில் குறிப்பிட வேண்டும்.
ஐடிஆர் படிவம் 2
ஐடிஆர் படிவம் 2-ன் கீழ் தனிநபர்கள் அல்லது இந்து கூட்டு குடும்பத்தினர் வருமானம் வேலை அல்லது வணிகம் இல்லாமல் பிற வழிகளில் வரும் பொதுச் சமர்ப்பிக்க வேண்டியது ஆகும்.
என்ஆர்ஐ
வெளிநாட்டு இந்தியர்கள் என்றால் வெளிநாட்டு வங்கி கணக்கினை அளித்து வருமான வரி செலுத்துதல் அல்லது கூடுதலாகச் செலுத்தப்பட்ட வரியினைத் திரும்பப் பெற முடியும்.
வழிமுறைகளில்
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நடப்பு ஆண்டில் வருமான வரி தாக்கல் வழிமுறைகளில் புதிய மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. ஆனால் மின்னணு முறையில் சரிபார்ப்பினை செய்ய முடியும்.
சஹாஜ் அல்லது சுகம்
ஐடிஆர் 1 சஹாஜ் அல்லது ஐடிஆர் 4 சுகம் என எந்தப் படிவத்தில் வருமான வரி தாக்கல் செய்யப் போகிறோம் என்பதைப் பொருத்து விலக்குகள் அளிக்கப்படும்.
ஜிஎஸ்டி
வணிகம் அல்லது பிற தொழில் மூலம் வரும் வருவாய்க்கு ஜிஎஸ்டி எண் குறிப்பிட வேண்டும். அதற்கான வழிமுறைகள் புதிதாகப் படிவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
கடைசித் தேதி
நடப்பு மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி தக்கல் செய்யக் கடைசித் தேதி 2018 ஜூலை 31 ஆகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications