நிஃப்டி 50 குறியீடு இன்று புதிய உச்சத்தைத் தொட்டு முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது, அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்கும் முடிவில் உறுதியானதில் இருந்து பங்குச்சந்தையில் அதிகப்படியான முதலீடுகள் குவியத் துவங்கியுள்ளது. இதே காலகட்டத்தில் பத்திர சந்தையில் இருந்த முதலீடுகள் குறைந்து அதன் லாப அளவீடுகள் குறைந்துள்ளது.
நிஃப்டி 50 குறியீடு புதிய உச்சத்தை எட்டி வெறும் 18 வர்த்தக நாளில் புதன்கிழமை தனது முந்தைய உச்சமான 25,078ஐ தாண்டி 25,114.05 புள்ளிகளை இன்று எட்டியுள்ளது. இதற்கிடையில், சென்செக்ஸ், அதன் புதிய உயரமான 82,129ஐ தொடுவதற்கு 143 புள்ளிகள் மட்டுமே குறைவாக உள்ளது.

தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 50 குறியீடு 12.30 மணிக்கு 81.65 புள்ளிகள் உயர்ந்து 25,099.40 ரூபாயாக உள்ளது, இதேபோல் சென்செக்ஸ் குறியீடு 244.6 புள்ளிகள் உயர்ந்து 81,956.22 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தக உயர்வுக்கு முதலும் முக்கியமான காரணம் அமெரிக்காவில் பென்ச்மார்க் வட்டி விகிதத்தைக் குறைக்கும் காரணத்தால் ஐடி துறை நிறுவனங்கள் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெறும் காரணத்தால் இத்துறை பங்குகள் அதிகளவில் உயர்ந்து நிஃப்டி 50 புதிய உச்சத்திற்குத் தொட முக்கியமான காரணமாக இருந்தது.
இன்றைய வர்த்தகத்தில் துறை ரீதியாக பார்க்கும் போது, நிஃப்டி IT மற்றும் நிஃப்டி ஃபார்மா இரண்டும் 52 வார உயர்வை எட்டியது. நிஃப்டி IT 2.36% உயர்ந்து 42,711 ஆக இருந்தது. இதில் LTIMindtree, விப்ரோ, Coforge மற்றும் Mphasis ஆகியவை அதிகளவில் உயர்ந்தன. நிஃப்டி ஃபார்மா 0.5% உயர்ந்து 22,856 ஆக இருந்தது. இதில் கிரானுல்ஸ், சைடஸ் லைஃப் மற்றும் பயோகான் ஆகியவை அதிகமாக உயர்ந்தது.
இதேவேளையில் சென்செக்ஸ் குறியீட்டில் பார்க்கும் போது மஹிந்திரா & மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், டைட்டன், சன் ஃபார்மா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை லாபத்துடன் திறந்து இக்குறியீட்டுக்கு வலு சேர்த்தது. அதே சமயம் HCL டெக், ICICI வங்கி, TCS, Bajaj Finserv மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை சரிவுடன் துவங்கி உயர துவங்கியுள்ளது.
மேலும் NBCC நிறுவனத்தின் இயக்குநர் குழு, தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்குவது குறித்து ஆகஸ்ட் 31 அன்று கூட்டம் நடத்த உள்ளதால், இந்த பங்குகள் 8%க்கும் அதிகமாக உயர்ந்தது.
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications