வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கின. இந்த நிலையில் முடிவும் முதலீட்டாளர்களுக்கு சற்று சாதகமாகவே முடிவடைந்துள்ளது.
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 84.31 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 40,593.80 ஆக முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 16.80 புள்ளிகள் அதிகரித்து 11,931 ஆக முடிவடைந்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், எட்டாவது சந்தை நாளாக ஏற்றத்தினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதாரணமாக பட்டையை கிளப்பும் ஐடி பங்குகளும், பார்மா பங்குகளும், இன்றும் சற்று ஏற்றத்தில் தான் முடிவடைந்துள்ளது.
குறிப்பாக ஐடிசியின் பங்கு விலையானது 2% ஏற்றத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது தற்போது 172.45 ரூபாயாக உள்ள நிலையில், இதன் அடுத்த டார்கெட் 220 ரூபாய் என்று மணிகன்ட்ரோல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது கிட்டதட்ட 3% அதிகரித்துள்ளதாகவும், ஐடிசி பங்கின் விலை 2.62%, ஏசியன் பெயிண்ட்ஸ் பங்கின் விலையானது 169% ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.
இதே ஏர்டெல் 2.83% வீழ்ச்சியுடனும், ஓஎன்ஜிசி 1.63% சரிவுடனும், ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு விலையானது 1.52% சரிவுடனும் காணப்படுகிறது.
இதே ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் வங்கி, ஐடிசி, இன்போசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் மதிப்பானது டாப்பர்களாகவும் உள்ளது.
இதே எஸ் & பி பிஎஸ்இ தகவல் தொழில்நுட்ப துறை குறியீடு 1.48% ஏற்றத்துடனும், எஸ் & பி பிஎஸ்இ மெட்டல் இண்டெக்ஸ் 3.68% சரிவுடனும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் இன்றைய டாப் பெர்பார்மர் இன்டெக்ஸ் ஐடி குறியீடு தான். அவற்றோடு பார்மா மற்றும் எஃப் எம் சி ஜி குறியீடு சற்று ஏற்றத்துடனும் முடிவடைந்துள்ளது. இதே மற்ற துறை குறியீடு சிவப்பு நிறத்தில் முடிவடைந்துள்ளன. நிஃப்டி மீடியா 2% குறைவாக முடிவடைந்துள்ளது.
100க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தினை தொட்டுள்ளது. இதில் எல் & டி இன்ஃபோடெக், வாலியன்ட் ஆர்கானிக்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப் மற்றும் அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் உள்ளிட்ட பல பங்குகள் உள்ளன.


Click it and Unblock the Notifications