அமெரிக்காவின் வரி விதிப்பால் தரை தட்டிய வாகன துறை பங்குகள்.. டாடா, பஜாஜ் நிறுவனங்களும் தப்பவில்லை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளும் குறைந்தபட்சம் 10 சதவீதம் விதித்தார் மேலும், அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை கொண்ட சுமார் 60 நாடு்கள் மீது கூடுதல் வரிகளை டிரம்ப் விதித்தார். குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த வரி விதிப்பு அடுத்த வாரம் (ஏப்ரல் 9ம் தேதி) நடைமுறைக்கு வரும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த துறைகளுக்கு குறிப்பாக வாகன துறைக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்தியாவின் மொத்த தொழில்துறை ஏற்றுமதியான 2,120 கோடி டாலர்களில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவிற்கான வாகன உதிரிபாக ஏற்றுமதியாகும். தரகு நிறுவனமான மெக்வாரி நிறுவனம் கூறுகையில், அமெரிக்காவிற்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 3 சதவீத பங்களிப்பை கொண்ட வாகன துறை அழுத்தத்தை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 26 சதவீத வரி அமெரிக்க சந்தையில் இந்திய ஆட்டோமொபைல் ஏற்றுமதிகளின் தேவை மற்றும் போட்டித்தன்மையை பாதிக்கும்.

அமெரிக்காவின் வரி விதிப்பால் 4 சதவீதம் வரை சரிந்த வாகன துறை பங்குகள்

இது உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு, சாத்தியமான பணிநீக்கங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி சீர்குலைவுகளுக்கு வழிவகுக்கும். இத்தகைய அதிக வரிகள் தொழில்துறை முழுவதும் பாதித்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.50 சதவீதம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தது. அமெரிக்காவின் வரி விதிப்பு ஆட்டோதுறை பாதிக்கும் என்ற மதிப்பீடு காரணமாக நிஃப்டி ஆட்டோ இன்டெக்ஸில் இடம் பெற்றுள்ள பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ், பாரத் ஃபோர்ஜ், பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ் மற்றும் மதர்சன் உள்ளிட்ட பங்குகள் வர்த்தகத்தின் இடையே 4 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது.

தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.27 சதவீதம் குறைந்து ரூ.2,483.15ஆக இருந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.43 சதவீதம் சரிவு கண்டு ரூ.655.55ல் முடிவுற்றது. பாரத் ஃபோர்ஜ் நிறுவன பங்கு விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.28 சதவீதம் வீழ்ச்சி கண்டு ரூ.1,115.10ல் நிலை கொண்டது. பஜாஜ் ஆட்டோ நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.02 சதவீதம் குறைந்து ரூ.7,909.75ல் முடிவுற்றது. சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் பங்கு விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.40 சதவீதம் குறைந்து ரூ.129.05ஆக சரிந்தது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+