200 புள்ளிகள் சரிவில் முடிந்த சென்செக்ஸ் குறியீடு..!

நாட்டின் முன்னணி பார்மா நிறுவனமான சன் பார்மா அமெரிக்க நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் நஷ்டத்தை அடைந்திருந்த காரணத்திலானாலும், ஐடிசி போன்ற பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் லாப நோக்கத்தில் இன்று அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்தனர்.

இதனால் இன்றைய வர்த்தகம் துவக்கம் முதல் தொடர் சரிவைச் சந்தித்தது.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

காலை வர்த்தகம் துவக்கம் முதல் தொடர் சரிவைச் சந்தித்து வந்த மும்பை பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 205.72 புள்ளிகள் சரிந்து 30,365.25 புள்ளிகளை அடைந்தது.

நிஃப்டி

நிஃப்டி

சென்செக்ஸ் குறியீட்டை போலவே சரிவுடன் துவங்கினாலும், ஐரோப்பிய சந்தையில் சில புள்ளிகள் உயர்ந்தாலும் சரிவிலேயே முடிந்தது.

இன்றைய வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 52.10 புள்ளிகள் சரிந்து 9,386.15 புள்ளிகளை அடைந்தது.

 

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

இன்றைய வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ், சிப்லா, சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது. இதைத் தொடர்ந்து மாருதி சுசூகி, மஹிந்திரா, விப்ரோ, டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டோ கார்ப் ஆகிய நிறுவனங்கள் 0.58 சதவீதத்தில் இருந்து 2.70 சதவீதம் வரை உயர்ந்தது.

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

இன்று மாலை, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியாகிறது. இதன் எதிரொலிகள் நாளை காலை வர்த்தகத்தில் தெரியும்.

ரூபாய்

ரூபாய்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாகக் குறைவான அளவில் சரிவடைந்து வருகிறது.

இதன் படி இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.77 ரூபாயாகச் சரிந்து.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+