மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 0.68 சதவீதம் என 243.91 புள்ளிகள் உயர்ந்து 36,035.97 புள்ளிகளாகக் காலை 10:15 மணியளவில் வர்த்தகம் செய்யப்பட்டுப் புதிய உச்சத்தினைத் தொட்டுள்ளது.

அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி முதன் முறையாக 0.69 சதவீதம் என 74.65 புள்ளிகள் உயர்ந்து 11,040.85 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் செலவின மசோதாவில் தற்காலிகமாகக் கொண்டு வரப்பட்ட முடிவுகளுக்கு இரு கட்சிகளும் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஷட்டவுன் தடுக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக ஆசிய சந்தையில் இன்று அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. அமெரிக்க அரசின் இந்த முடிவுகளின் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டும் இல்லாமல் இந்திய முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கிக் குவிப்பதே இதற்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் ஜிடிபி 2017-ம் ஆண்டு 6.7 சதவீதமாக இருந்த நிலையில் 7.4 சதவீதமாக 2018-ம் ஆண்டு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சீனாவை விட வேகமாக இந்திய பொருளாதாரம் வேகமாக 2018-ம் ஆண்டு உயர்ந்து உலகின் 5வது மிகப் பெரிய பங்கு சந்தையாக உருவெடுக்கும் என்றும் அன்மையில் வெளியான அறிக்கை முடிவுகள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications