புதன்கிழமை வர்த்தகத்தில் மென்பொருள், ஹெல்த்கேர் நிறுவனங்கள் அதிகளவிலான முதலீட்டு உடன் வளர்ச்சி அடைந்த நிலையில் சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் வரையில் உயர்ந்தது. ஆனால் ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்த காரணத்தால் சென்செக்ஸ் சரிந்தது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 46.64 புள்ளிகள் உயர்ந்து 35,739.16 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 13.85 புள்ளிகள் உயர்ந்து 10,856.70 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் டாக்டர் ரெட்டி, டிசிஎஸ், எஸ்பிஐ, பவர்கிரிட், இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகியவை அதிகளவிலான வளர்ச்சியை அடைந்தது.
அதேபோல் டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், பார்தி ஏர்டெல், ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications