நிஃப்டி குறியீடு இதற்கு முன்பே 10,010 புள்ளிகளை அடைந்திருந்தாலும், இன்றைய வர்த்தகத்தில் தான் 10,000 புள்ளிகளை தாண்டி முடிவடைந்துள்ளது.
கடந்த சில வாரங்களிலேயே புதன்கிழமை வர்த்தகத்தில் தான் பார்மா, வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் அதிகளவிலான முதலீட்டை ஈர்த்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாட்டு நாணய கொள்கைகள் போதிய நாணய புழக்கத்துடன் இருக்கும் காரணத்தாலும், இதில் மாற்றங்கள் ஏதுமில்லாத காரணத்தால் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் அதிகளவிலான முதலீடு பங்குச்சந்தையில் விழுகிறது.
இந்த லாபகரமன சூழ்நிலையிலேயே மும்பை பங்குச்சந்தை மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்து வருகிறது.
ரிசர்வ் வங்கி
இந்தியாவில் பணவீக்கம் அதிகளவில் குறைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் நடக்க இருக்கும் நாணய கொள்கை கூட்டத்தில், வட்டி விகிதங்கள் கண்டிப்பாக குறைக்கப்படும்.
இதன் இந்தியாவில் பணபுழக்கம் மேலும் அதிகரிக்கும்.
சென்செக்ஸ்
இன்று மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் துவங்கிய முதல், நிலையான வர்த்தக உயர்வுடன் சென்செக்ஸ் 154.19 புள்ளிகள் உயர்ந்தது. இதன் காரணமாக சென்செக்ஸ் 32,382.46 என்ற புதிய உயர்வை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிலையான வர்த்தகத்தை பெற்ற நிஃப்டி குறியீடு இன்றைய வர்த்தகத்தில் 56.10 புள்ளிகள் உயர்ந்து 10,020.65 புள்ளிகளை அடைந்தது.


Click it and Unblock the Notifications