9,300 புள்ளிகளை முதல் முறையாக எட்டியது நிஃப்டி.. என்ன காரணம்..?
திங்கட்கிழமையைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் மும்பை பங்குச்சந்தையில் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றது. இதன் காரணமாக நிஃப்டி குறியீடு வரலாறு காணாத வகையில் முதல் முறையாக 9,300 புள்ளிகளை எட்டியுள்ளது.
நேற்றை வர்த்தகத்தில் எதிரொலியாக இன்று உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்திருந்தாலும், பன்னாட்டு முதலீட்டாளர்களின் இன்றைய அதிகப்படியான முதலீட்டுக்கு முக்கியக் காரணம் உண்டு.
என்ன காரணம்
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் அந்நாட்டுப் பொருளாதாரத்திற்கு ஏற்ற முடிவுகள் தான் வரும் என்று எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் ஐரோப்பிய சந்தை முழுவதும் இதன் அலைகள் பரவி வருகிறது. இதன் காரணமாக இன்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் சந்தைகளை 0.2 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்தது.
பன்னாட்டு முதலீடுகள்
ஐரோப்பிய சந்தையின் சாதகமான சூழ்நிலை ஆசிய சந்தையில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய ஆர்வத்தைத் தூண்டியது. இதன் காரணமாக அதிகப்படியான லாபத்தை ஈர்க்கும் திட்டத்துடன் பன்னாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்தனர்.
சென்செக்ஸ்
செவ்வாய்க்கிழமை வர்த்தகத் துவக்கம் முதல் நிலையான வர்த்தகத்தைப் பெற்று வந்த சென்செக்ஸ் குறியீடு ஐரோப்பிய சந்தை சில சரிவுகளைச் சந்தித்தாலும் மீண்டும் உயர்வடையத் துவங்கியது.
இதன் காரணமாக இன்றைய வர்த்தக முடிவில் 287.40 புள்ளிகள் உயர்வடைந்து 29,943.24 புள்ளிகளை எட்டியது.
நிஃப்டி
பன்னாட்டு முதலீடுகள் பெரும்பாலும் ப்ளூ சிப் பங்குகள் மீது முதலீடு செய்யப்படும் காரணத்தினால் இன்று நிஃப்டி குறியீடு சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் 88.65 புள்ளிகள் உயர்ந்து நிஃப்டி குறியீடு வரலாறு காணாத வகையில் 9,306.60 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தக முடிவில் டிசிஎஸ், சிப்லா, கெயில், என்டிபிசி, எச்டிஎப்சி வங்கி ஆகியவை சரிவைடந்தது.
அதேபோல் மஹிந்திரா, ஆக்சிலஸ் வங்கி, பார்தி ஏர்டெல், ஹீரோ மோட்டோ கார்ப் ஆகியவை அதிகளவிலான உயர்வை அடைந்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications