வரலாறு காணாத உயர்வில் நிஃப்டி.. சென்செக்ஸ் 116 புள்ளிகள் உயர்வு..!
வரலாறு காணாத உயர்வில் நிஃப்டி.. சென்செக்ஸ் 116 புள்ளிகள் உயர்வு..!
புதன்கிழமை நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி குறித்த 4 முக்கிய மசோதா நிறைவேறிய நிலையில் 2017, ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்படும் என உறுதியாகியுள்ளது.
இதன் காரணமாகவும், இன்று மார்ச் மாத ஆர்டர்கள் முடிவடையும் காரணத்தினாலும் இன்று மும்பை பங்குச்சந்தை உயர்வில் முடிந்தது.

வியாழக்கிழமை வர்த்தகத்தில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 115.99 புள்ளிகளை உயர்ந்து 29,647.42 புள்ளிகளை எட்டி 3வது நாளாகத் தொடர்ந்து உயர்வில் முடிந்துள்ளது சென்செக்ஸ்.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று 29.95 புள்ளிகள் உயர்ந்து வரலாறு காணாத வகையில் 9,173.75 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications