மும்பை : கடந்த சில தினங்களாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்த இந்திய பங்கு சந்தை, வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடனேயே முடிவடைந்தன
வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்களுக்கான (foreign portfolio investors (FPIs), அதிக வரியிலிருந்து சற்று விலக்கு அளிக்கப்படலாம் என்ற செய்திகள் வெளியானதையடுத்து, அன்னிய முதலீடுகள் அதிகரிக்கலாம் என்று எதிப்பார்ப்பிலேயே சந்தைகள் ஏற்றத்தை கண்டன. இந்த நிலையில் வாரா இறுதியான இன்றும் இதே நிலையிலேயே காணப்படுகிறது.

இந்த நிலையிலேயே கடந்த வியாழக்கிழமையன்று, நல்ல ஏற்றம் கண்ட, இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளன. இன்றும் சற்றே ஏற்றம் கண்டே காணப்படுகிறது.
குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 254 புள்ளிகள் ஏற்றம் கண்டு 37,581 ஆக முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 77 புள்ளிகள் அதிகரித்து 11,109 ஆக முடிவடைந்தது.
எனினும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டு, தற்போது 70.80 ரூபாயாக குறைந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தை கண்டாலும், சர்வதேச சந்தைகளில், குறிப்பாக DAX குறியீடு மற்றும் CAC சந்தைகள் சற்று வீழ்ச்சியுடனும், எஃப்.டி.எஸ்.இ சற்று ஏற்றம் கண்டும் காணப்படுகிறது.
இதில் நிஃப்டி குறியீட்டில் உள்ள இந்தியா புல்ஸ், ஈச்சர் மோட்டார், மாருதி சுசூகி, பஜாஜ் பைனான்ஸ், பஜான் பின்சர்வ் உள்ளிட்ட பங்குகாள் டாப் கெய்னராகவும், இதுவே யெஸ் பேங்க், கோல் இந்தியா உள்ளிட்ட சில பங்குகள் டாப் லூசர்களாகவும் இருந்தன.
இதுவே சென்செக்ஸ் குறியீட்டில் மாருதி சுசூகி, பஜாஜ் பைனான்ஸ், வேதாந்தா, ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராக இருந்தன. இதுவே டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், யெஸ் பேங்க், கோல் இந்தியா, ஐ.டி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்பட்டன.
இதுவே பி.எஸ்.இயில் ஹெல்த்கேர், மெட்டல்ஸ், டெக் துறை குறியீடு சற்று நேரத்தில் சரிவிலேயே காணப்படுகிறது. இதே நிஃப்டி இன்டெக்ஸில் கன்சியூமர் அன்ட் டியூரபில் குட்ஸ் , நிஃப்டி ஆட்டோ மொபைல் துறை பங்குகள் நல்ல ஏற்றத்திலும் காணப்பட்டது. எனினும்


Click it and Unblock the Notifications