புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 258.80 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPEC உற்பத்தியைக் குறைக்க முடியாது என அறிவித்துள்ள நிலையில், இனி வரும் நாட்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 45 டாலர் என்ற நிலையில் மட்டுமே இருக்கும். இதனால் இப்பிரிவில் முதலீடும் அதிகமாக இருக்காது.
எனவே சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் அனைவரும் அமெரிக்கச் சந்தையை மட்டும் நம்பி இருக்கும் நிலை தற்போது நிலவி வருகிறது.
அமெரிக்கச் சந்தையின் வளர்ச்சி காரணிகள் அடுத்தச் சில மாதங்களுக்குச் சிறப்பாக உள்ள நிலையில், முதலீட்டாளர்களுக்குச் சிறந்த வாய்ப்பாக உள்ளது. மேலும் இந்திய சந்தையின் ஜூலை-செப்டம்பர் மாத்திற்கான ஜிடிபி அளவுகள் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிட உள்ள நிலையில் மும்பை பங்குச்சந்தையில் இன்று அதிகளவிலான முதலீடுகள் குவிந்தது.
இதன் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு இன்று முழுவதும் ஏறுமுகமாகவே இருந்தது.

புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 258.80 புள்ளிகள் உயர்ந்து 26,652.81 புள்ளிகளை எட்டியும், நிஃப்டி குறியீடு 82.35 புள்ளிகள் உயர்ந்து 8,224.50 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தலா 1 சதவீதம் உயர்ந்து 2 வார உச்சத்தை அடைந்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications