வரலாற்று உயர்வில் முடிந்த நிஃப்டி.. அமெரிக்காவின் அறிவிப்புக் காற்றில் கறைந்தது..!
அமெரிக்கப் பெடரல் வங்கியின் 0.25 சதவீத வட்டி உயர்வு, சர்வதேச சந்தையில் மோசமானதாகப் பார்க்கப்பட்ட காரணத்தால், நாணய சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்புச் சரிந்தது. இதன் காரணமாக ஆசிய சந்தையில் முதலீடு அதிகரித்துக் காணப்பட்டது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை வர்த்தகத்தில் 65.47 ரூபாயாக உயர்ந்த நிலையில் இந்திய சந்தையிலும் அதிகளவிலான முதலீடுகள் குவிந்தது.
ஆசிய சந்தை
இந்நிலையில் ஆசிய சந்தையில் அமெரிக்கப் பெடர்ல் வங்கியின் அறிவிப்புகள் செவி சாய்க்காத நிலையில் ஸ்திரமான நிலையில் வர்த்தகத்தை அடைந்தது.
வரலாறு காணாத உயர்வு
இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையிலும் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 217 புள்ளிகள் வரை உயர்ந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு வரலாறு காணாத உயர்வை அடைந்தது.
பங்குச்சந்தை
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 187.74 உயர்ந்து 29,585.85 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 68.90 புள்ளிகள் உயர்ந்து 9,153.70 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.


Click it and Unblock the Notifications