தொடர்ந்து உயர்ந்து வந்த மும்பை பங்குச்சந்தை இன்று ஏப்ரல் மாதத்திற்கான ஆர்டர்கள் முடியும் காரணத்தால் முதலீட்டாளர்கள் பெரிய அளவில் முதலீடு செய்யவில்லை. இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 220 புள்ளிகள் வரையில் சரிந்தது.
மேலும் புதன்கிழமை வர்த்தகத்தில் டிபி ரியாலிட்டி, என்ஐஐடி டெக்னாலஜிஸ், டிஹெச்எப்எல், இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட், பெர்ஜர் பெயின்ட், என்பிசிசி, மாரிகோ ஆகிய நிறுவனங்கள் இன்று அதிகப்படியாக 13 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடைந்தது.

ஆசிய சந்தையில் இன்று சீனா, ஹாங்காங், ஜப்பான், தைவான் ஆகிய சந்தைகள் சரிவைத் தழுவிய நிலையில் மும்பை பங்குச்சந்தையில் ஏப்ரல் மாதத்திற்கான ஆர்டர் முடியும் காரணத்தாலும் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 115.37 புள்ளிகள் வரையில் சரிந்து 34,501.27 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 43.80 புள்ளிகள் சரிந்து 10,570.55 புள்ளிகள் எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications