சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் பணவீக்கம் மற்றும் நிதிப் பற்றாக்குறை அதிகமாகும் என்பதால் இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் பத்திர முதலீட்டு மீதான வருமானம் அதிகளவில் குறைந்துள்ளது.
இதன் காரணமாக இந்திய சந்தையிலும் இன்று முதலீட்டு அளவும் குறைந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு அதிகளவில் சரிவை சந்தித்தது.
மும்பை பங்குச்சந்தை
இன்று காலை வர்த்தகத்தில் உயர்வுடன் துவங்கி மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு முதலீட்டாளர்களின் தொடர் பங்கு விற்பனையின் காரணமாகச் சரிந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 73.08 புள்ளிகள் சரிந்து 35,246.27 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 24.15 புள்ளிகள் சரிந்து 10,716.55 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிந்தது.
முக்கிய நிறுவனங்கள்
வியாழக்கிழமை வர்த்தகத்தில் ஓஎன்ஜிசி, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி வங்கி, கோல் இந்தியா ஆகியவை கணிசமான உயர்வைச் சந்தித்தது.
இன்றைய வர்த்தகத்தில் டாக்டர் ரெட்டி 3.70 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 2.34 சதலீதம் சரிந்தது. இதைத் தொடர்ந்து டிசிஎஸ், என்டிபிசி, டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, பவர் கிரிட், சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications