வரலாறு காணாத உயரத்தைத் தொட்டது நிப்டி.. சென்செக்ஸ் 231 புள்ளிகள் உயர்ந்தது..!
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 231.41 புள்ளிகள் அதாவது 0.77 சதவீதம் உயர்ந்து 30,126.21 புள்ளிகளைத் தொட்டது.
அதே நேரம் தேசிய பங்குச் சந்தை குறியீடு நிப்டி 47.95 புள்ளிகள் அதாவது 0.51 சதவீதம் உயர்ந்து 9,359.90 புள்ளிகளைத் தொட்டு வரலாறு காணாது உயர்வைச் சந்தித்தது.
லாபம் பெற்ற துறைகள்
வியாழக்கிழமை மும்பை பங்குச் சந்தையைப் பொருத்த வரை வங்கி நிறுவனப் பங்குகள் நல்ல உயர்வைப் பெற்றன. வங்கி நிறுவனப் பங்குகள் 2.32 சதவீத உயர்வும், நுகர்வோர் சாதனங்கள் பிரிவு 1.41 சதவீதம் உயர்வும், எஃப்எம்சிஜி நிறுவனப் பங்குகள் 0.77 சதவீதமும், பொதுத் துறை நிறுவனப் பங்குகள் 0.89 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளன.
இன்று சரிந்த துறைகள்
மறுபக்கம் ரியால்டி குறியீடுகள் 0.8 சதவீதம் சரிந்தும், மெட்டல் நிறுவனப் பங்குகள் 0.77 சதவீதமும், ஆடோமொபைல் நிறுவனப் பங்குகள் 0.55 சதவீதமும், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனப் பங்குகள் 0.53 சதவீதம் சரிந்தும் வர்த்தகம் செய்யப்பட்டன.
வங்கி பங்குகள் சிறப்பாக இருந்த காரணம்
வங்கிகள் மற்றும் தேசிய எஃகு போன்றவற்றுக்குப் புதிய கொள்கை திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதை அடுத்துப் பங்குகள் விலை நல்ல நிலையை எட்டின.
இன்றைய டாப் ஐந்து பங்குகள்
ஐசிஐசிஐ வங்கி (+ 9.24%), அதானி துறைமுகம் (+ 3.68%), ஆக்சிஸ் பாங்க் (+ 3.63%), ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (+ 3.27%) மற்றும் ஹெச்.யூ.எல் (+ 2.36%)
அதிக நட்டம் அடைந்த பங்குகள்
டாடா மோட்டார்ஸ் (-2.27%), ஓஎன்ஜிசி (-1.15%), எம் & எம் (-0.89%), சிபலா (-0.84%) மற்றும் ரிலையன்ஸ் (-0.84%) ஆகியவை ஆகும்.


Click it and Unblock the Notifications