ஜனவரி மாதம் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு குவிந்தாலும், இந்த வாரம் கார்பரேட் நிறுவனங்கள் வெளியிடும் டிசம்பர் மாத காலாண்டு முடிவுகளின் காரணமாக மந்தமான வர்த்தகத்தை மட்டுமே மும்பை பங்கு சந்தைப் பெற்று வருகிறது.
இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 70.42 புள்ளிகள் உயர்ந்து 34,503.49 புள்ளிகளை அடைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 19.00 புள்ளிகள் உயர்ந்து 10,651.20 புள்ளிகள் அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு 10,650 புள்ளிகளை முதல் முறையாகத் தாண்டி புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ் அதிகப்படியாக 2.28 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பார்தி ஏர்டெல், கோட்டாக் வங்கி, ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், எச்டிஎப்சி ஆகிய நிறுவனங்கள் லாபத்தை அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications