கடந்த சில வாரங்களாகவே இந்திய சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், அன்னிய முதலீடுகளானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், இந்திய சந்தையில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.
இது மேற்கொண்டு வரவிருக்கும் நாட்களிலும் தொடரலாம் என எதிபார்க்கப்படுகிறது.
ஏனெனில் வரவிருக்கும் அமெரிக்காவின் மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாக பங்கு சந்தையில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் உச்சம்
இந்திய பங்கு சந்தையானது நவம்பர் 24ம் தேதியன்று இந்திய சந்தையானது உச்சத்தில் முடிவடைந்தது. குறிப்பாக சென்செக்ஸ் உச்சத்தில் இருந்து வருகின்றது. இது வெளி வரும் கார்ப்பரேட் அறிவிப்புகள், வங்கிகள், ஆட்டோ மொபைல் துறை உள்ளிட்ட பங்குகள் உச்சத்தில் காணப்படும் நிலையில், இது மேற்கொண்டு ஏற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.
வரும் நாட்களில் எப்படியிருக்கும்?
டிசம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில், வட்டி விகிதமானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே சீனாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்ப்டுகிறது. இதற்கிடையில் நிஃப்டி 18,400 - 18,880 என்ற லெவலில் வரும் வாரத்தில் இருக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே பேங்க் நிஃப்டி 43,700 என்ற லெவலை எட்டலாம்.
ஐடி பங்குகள் உச்சம் தொடலாம்
இந்த வாரம் நிஃப்டி ஐடி மற்றும் வங்கித் துறையானது வலுவாக காணப்படும் நிலையில், இது நீண்டகால நோக்கில் மீண்டும் ஏற்றம் காணலாம் என எதிபார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கவனிக்க வேண்டிய பங்குகள் குறித்து நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஐடி பங்குகள் வலுவான ஏற்றத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அட்ரிஷன் விகிதமும் உச்சத்தில் காணப்படுகின்றது.
வங்கித் துறையும் உச்சம் தொடலாம்
வங்கி துறையிலும் வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், வங்கி பங்குகள் உச்சம் எட்டி வருகின்றன. இது மேற்கொண்டு சந்தையின் ஏற்றத்திற்கு வழிவகுக்கலாம். இதற்கிடையில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் உச்சம் தொடலாம். இது மேற்கொண்டு சந்தைக்கு சாதகமாக அமையலாம். இந்த பங்குகள் 25 - 125% ஏற்றத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மால் கேப் & மிட் கேப்
இதே ரியல் எஸ்டேட் வங்கி மற்றும் உள்கட்டமைப்பு துறையானது மேம்பட்டு வரும் நிலையில், சிமெண்ட் பங்குகளும் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஏற்றத்தில் லார்ஜ் கேப் பங்குகளை விட, ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் பங்குகள் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லார்ஜ் கேப் நிறுவனங்கள் மந்த நிலையால் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே பொதுத்துறை நிறுவனங்களும் நல்ல ஏற்றத்தில் காணப்படுகிறது.
ஏற்றம் காணலாம்
ரியால்டி, நுகர்வோர், வங்கிகள் மற்றும் ஐடி துறையானது ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள், மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் ஏற்றம் காணலாம்.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications