இந்திய பங்குச் சந்தைகளுக்கு கடந்த ஆண்டு ஒரு பொன்னான ஆண்டாக அமைந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி கடந்த செப்டம்பரில் புதிய உச்சத்தை தொட்டது. ஆனால் அதன் பிறகு தொடர்ந்து 3 மாதங்களாக சரிவை சந்தித்தது. இந்நிலையில் தொடர்ந்து 4வது மாதமாக ஜனவரியிலும் நிப்டி வீழ்ச்சி பாதையில் உள்ளது.
இந்த மாதமும் நிப்டி சரிவை சந்திக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதி. இந்நிலையில் இது தொடர்பாக நிபுணர்கள் கூறுகையில், தொடர்ந்து 4 மாதங்களாக நிப்டி சரிவை சந்திப்பது என்பது கடந்த 23 ஆண்டுகளில் பதிவாகாத ஒரு விதிவிலக்கான நிகழ்வாகும்.

இதற்கு முன் 2001ல் இது போல் நடந்திருந்தது. 2001ம் ஆண்டில் நிப்டி ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் சராசரியாக 6 சதவீதம் சரிவை சந்தித்தது. இருப்பினும் அடுத்த மூன்று மாதங்களில் 5 சதவீதம் ஏற்றம் கண்டது. 2000ம் ஆண்டு முதல் இதுவரையிலான காலத்தில், 3 மாதங்கள் தொடர்ச்சியாக 13 முறை நிப்டி சரிவை கண்டுள்ளது.
அதேசமயம், 70 சதவீத சமயம், அடுத்த 3 மாதங்களில் நிப்டி சராசரியாக 3 சதவீதம் ஏற்றம் கண்டதை கண்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதல் ஜனவரியில் நிப்டி சரிவை சந்திப்பது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது.
பிப்ரவரி மாதத்தில் சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்பது, பெரும்பாலும், பட்ஜெட் அறிவிப்புகள், ரிசர்வ் வங்கி கொள்கை, டிரம்பின் வர்த்தக கொள்கைகள், அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு மற்றும் நிறுவனங்களின் 3வது காலாண்டு நிதி நிலை முடிவுகள் பொறுத்தே அமையும். கடந்த கால வரலாற்றை பார்க்கும்போது பொதுவாக பிப்ரவரி மாதமும் எதிர்மறையாக இருந்ததை காட்டுகிறது.
2010ம் ஆண்டு முதல் தாக்கல் செய்யப்பட்ட 18 பட்ஜெட் அமர்வுகளில், பட்ஜெட்டுக்கு பிறகு 12 முறை நிப்டி ஏற்றம் கண்டுள்ளது. பட்ஜெட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு நிப்டி ஒரு சதவீத்துக்கு மேல் வீழ்ச்சி அடையும் போதெல்லாம், பட்ஜெட்டுக்கு பிறகு ஏற்றம் கண்டு எழுச்சி கண்டுள்ளது என தெரிவித்தனர்.
பட்ஜெட் எதிர்பார்ப்புகள் குறித்து மோர்கன் ஸ்டான்லி ஆய்வாளர்கள் கூறுகையில், நுகர்வு அதிகரிக்கவும், உள்கட்டமைப்பு செலவினங்களை அதிகரிக்கவும் பட்ஜெட்டில் நேரடி வரிகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயம், வீட்டுவசதி, ரயில்வே, பாதுகாப்பு, மின்னணுவியல், ஜவுளி, வாகன துணை நிறுவனங்கள்,உணவு பதப்படுத்துதல் மற்றும் புதுப்பிக்கத்தக்க உள்ளிட்ட துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் அறிவிப்புகளை எதிர்பார்க்கிறோம்.
அதேசமயம் அறிவிப்புகள் மட்டுமே வருமான வாய்ப்பை உருவாக்கா என்பதை மனதில் கொள்ள வேண்டும். பட்ஜெட்டில் உண்மையான செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாகவும், முந்தைய ஆண்டைக் காட்டிலும் அது எவ்வாறு மாறுகிறது என்பதையும் பார்ப்பது அவசியம் என தெரிவித்தனர்.
யுபிஎஸ் இந்தியாவின் அனுபவ் அகர்வால் கூறுகையில், 2025-26ம் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதத்துக்கும் குறைவாக கட்டுப்படுத்தப்பட வேண்டுமானால், மூலதன செலவினங்கள் மற்றும் நுகர்வு ஊக்குவிப்பு குறைக்கப்படலாம் என்பதால், சந்தைகளில் பட்ஜெட்டின் தாக்கம் மந்தமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் கூறுகையில், எதிர்வரும் பட்ஜெட் வளர்ச்சி சார்ந்த பட்ஜெட்டாக இருக்கும். பொது உள்கட்டமைப்பின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக மூலதன செலவினங்களை அதிகரிப்பதில் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications