வட கொரியாவின் ஏவுகணை தாக்குதல் பிரச்சனைகளால் கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் மும்பை பங்குச்சந்தை மந்தமான வர்த்தகத்தை மட்டுமே பதிவு செய்து வந்த நிலையில், இன்று வர்த்தகத் துவக்கமே அமோகமாக இருந்தது.
இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்கப் பங்குச்சந்தையின் புதிய உச்சம், இதனைத் தொடர்ந்த ஆசிய சந்தையில் ஏற்பட்ட உயர்வு இந்திய சந்தையின் இன்றைய வர்த்தகத்திற்கு மிகவும் சாகமாக அமைந்தது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகம் துவக்கம் முதலே மும்பை பங்குச்சந்தை ஆசிய சந்தையில் வலுவான வர்த்தகத்தில் 0.50 சதவீத உயர்வுடன் துவங்கி முதலீட்டாளர்களைக் குஷிப்படுத்தியது.
பன்னாட்டு முதலீட்டாளர்
அமெரிக்க மற்றும் வட கொரியா பிரச்சனைகள் வெடித்தபோது பங்குச்சந்தையில் இருந்து முதலீட்டை வெளியேற்றி முதலீட்டாளர்கள் இன்று அதிகளவில் இந்திய சந்தையில் முதலீடு செய்துள்ளனர். இதன் காரணமாகச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தொடர்ந்து உயர்வுடன் காணப்பட்டது.
சென்செக்ஸ்
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 151.15 புள்ளிகள் உயர்வுடன் 32,423.76 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
நிஃப்டி
இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு புதிய உச்சத்தை அடைந்தது. திங்கட்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீடு 67.70 புள்ளிகள் உயர்ந்து 10,153.10 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் அதிகளவிலான லாபம் மற்றும் நஷ்டத்தை அடைந்த முக்கிய நிறுவனங்களின் விபரங்களை முழுமையாகத் தெரிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications