இந்தியா பல தொழிற்துறைகளில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்திருந்தாலும், இன்றும் விவசாயத் துறையின் உற்பத்தி நாட்டின் பொருளாதாரத்தின் பெரும் பங்கை வகிக்கிறது.
இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் பருவமழை 100 சதவீதம் பதிவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தெற்கு கேரள பகுதியில் பருவமழை குறித்த நாளுக்கு 2 நாள் முன்னதாகவே பதிவடையும் என ஆய்வுகள் வெளியாகியுள்ளது.
தடாலடி உயர்வு
ஏற்கனவே ஆசிய சந்தையின் வலிமையான வர்த்தகம் மற்றும் ரூபாய் மதிப்பின் தொடர் வலிமையின் காரணமாகக் கடந்த ஒரு வார காலமாக இந்திய சந்தையில் தொடர்ந்து அன்னிய முதலீட்டு அளவு அதிரகரித்துச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தினமும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
பருவமழை
இந்நிலையில் தற்போது பருவமழை மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவைற்றின் மூலம் இந்திய சந்தையின் மீது அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவிலான கவனத்தைச் செலுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாகவே இன்று சென்செக்ஸ் குறியீடு 260 புள்ளிகள் வரை உயர்வடைந்தது.
சென்செக்ஸ்
செவ்வாய்க்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் சென்செக்ஸ் குறியீடு துவக்கம் முதலே சீரான வளர்ச்சியை அடைந்த நிலையில், வர்த்தக முடிவில் 260.48 புள்ளிகள் உயர்ந்து 30,582.60 புள்ளிகளை அடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டை போலவே இன்று நிஃப்டி குறியீடும் தொடர் வர்த்தக உயர்வில் 66.85 புள்ளிகள் உயர்ந்து ஒரே நாளில் சுமார் 9,512.25 புள்ளிகளை அடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டுமே வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications