சரிவில் இருந்து தப்பித்த மும்பை பங்குச்சந்தை..!
திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் மிகவும் சிறப்பாக இருந்த நிலையில், புதன்கிழமை வர்த்தகம் மந்தமான காணப்பட்டது. இன்றைய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அதிக லாபம் அடைந்தாலும் சென்செக்ஸ் குறியீடு பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தது.
கடந்த இரண்டு நாட்களாக கார்பரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை எதிர்நோக்கியும், ஜிஎஸ்டி அமலாக்கத்தின் காரணம் அதிகளவில் இந்தியாவில் முதலீடு செய்துவந்த நிலையில் இன்று அதன் அளவு அதிகளவில் குறைந்தது.

மேலும் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வெறும் 57.73 புள்ளிகள் உயர்ந்து 31,804.82 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 30.05 புள்ளிகள் உயர்ந்து 9,816.10 புள்ளிகளை எட்டி புதன்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications