ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கம் 5 வருட சரிவை அடைந்துள்ளது. இந்தச் செய்தி முதலீட்டாளர்கள் மத்தியில் இந்திய சந்தையின் மீது முதலீட்டுக்கான ஆர்வத்தை அதிகரித்து.
இதன் மூலம் இன்று சென்செக்ஸ் குறியீடு நிலையான வர்த்தகத்தில் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது.
இதுமட்டும் தான் காரணமா..?
இன்றைய வர்த்தக உயர்விற்குப் பணவீக்கம் மட்டும் அல்லாமல் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி குறைப்பு குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது, மேலும் 10 வருட முதிர்வு காலம் கொண்ட முதலீட்டுப் பத்திரங்கள் 4 வார உயர்வை அடைந்துள்ளது.
இவை அனைத்து இன்றைய வர்த்தக உயர்விற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, ஆரம்பம் முதலே நிலையான வர்த்தகத்தில் தொடர்ந்து உயர்ந்த வண்ணமாக இருந்தது.
இதன் காரணமாக இன்றைய வர்த்தக முடிவில் வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.
சென்செக்ஸ்
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 133.97 புள்ளிகள் உயர்ந்து 30,322.12 புள்ளிகளை அடைந்தது. இதுவரை அடைந்திடாத உயரத்தை அடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டியும் இன்று நிலையான வர்த்தக உயர்வை அடைந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் 44.50 புள்ளிகள் உயர்ந்து 9,445.40 புள்ளிகளை எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications