மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை..!
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று ஆட்டோமொபைல், ரியாலிட்டி, நுகர்வோர் ஆகிய துறைகள் கணிசமான உயர்வை சந்தித்தாலும், எனர்ஜி, நிதியியல், டெலிகாம் ஆகிய துறைகள் சரிந்ததால் நிலையான வர்த்தகத்துடன் மும்பை பங்குச்சந்தை முடிந்தது.

மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் துவங்கும்போது சரிவுடன் துவங்கினாலும் 12 மணிக்கு மேல் வர்த்தகம் உயர்வுடன் காணப்பட்டது.
இதன் மூலம் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 45.63 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 33,731.19 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 0.70 புள்ளிகள் மட்டுமே சரிந்து 10,451.80 புள்ளிகளை அடைந்தது.


Click it and Unblock the Notifications