தொடர் உச்சத்தை சந்தித்து வந்த மும்பை பங்குச்சந்தை கடந்த இரு வர்த்தக நாளாக மந்தமான வர்த்தகத்தை மட்டுமே பெற்று வருகிறது. இதன் காரணமாக சென்செக்ஸ் குறியீடு 32,000 புள்ளிகளிலேயே வர்த்தகம் செய்து வருகிறது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் இன்போசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான லாபத்தை அடைந்தது. அதேபோல் ஆசிய சந்தையின் நிலையான வர்த்தகத்தின் காரணமாக தொடர்ந்து லாபகரமான வர்த்தகத்தையே பெற்றது.

இதன் காரணமாக திங்கட்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 54.03 புள்ளிகள் உயர்ந்து 32,074.78 புள்ளிகளை அடைந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே தொடர்ந்து நிலையான வர்த்தகத்தை பெற்ற நிஃப்டி குறியீடு வர்த்தக முடிவில் இன்றைய சராசரி அளவை விடவும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக நிஃப்டி குறியீடு 29.60 புள்ளிகள் உயர்ந்து 9,915.95 புள்ளிகளை அடைந்தது.
இன்னும் சில நாட்களில் நிஃப்டி குறியீடு 10,000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications