நாட்டின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன முதலீட்டாளர்கள், இன்று லாப நோக்கத்தில் இந்நிறுவனங்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர்.
மேலும் அமெரிக்க மருத்து கட்டுப்பாட்டு ஆணையம் பயோகான் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்புகளின் குறை கண்ட காரணத்தால், இந்திய பார்மா நிறுவனங்களின் பங்குகள் இன்று அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது.
மும்பை பங்குச்சந்தை
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்மா நிறுவனங்களைத் தாண்டி ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பின் காரணமாக வங்கி துறையில் செய்யப்பட்டு இருந்து முதலீடுகள் கணிசமாக வெளியேறி வருகிறது.
இதன் காரணமாக இன்று வர்த்தகச் சந்தை தொடந்து சரிவுடனே காணப்பட்டது.
பார்மா துறை
இந்திய பார்மா நிறுவனங்களுக்கு அமெரிக்கா மிகப்பெரிய சந்தையாக விளங்குகிறது. இதன் மூலம் மருத்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் நடவடிக்கையின் காரணமாக இன்று பயோகான் நிறுவனத்தின் பங்குகள் 7.6 சதவீதம் வரை சரிந்தது.
சன் பாரமா 4.5 சதவீதம் வரை சரிந்தது, டாக்டர் ரெட்டி நிறுவன பங்குகள் 3 சதவீதம் வரையில் சந்தித்தது.
சென்செக்ஸ்
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் தொடர் சரிவில் இருந்த சென்செக்ஸ் குறியீடு, ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் உயர துவங்கியது.
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 87.53 புள்ளிகள் உயர்ந்து 32,325.41 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பார்மா துறையில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக இன்று நிஃப்டி குறியீடு 2.1 சதவீதம் வரை சரிந்தது.
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று நிஃப்டி குறியீடு 52.75 புள்ளிகள் உயர்ந்து 10.066.40 புள்ளிகள் உயர்ந்து வர்த்தம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications