கொரோனா பீதியில் சென்செக்ஸ் 2,458 புள்ளிகள் சரிவு.. ரூபாயும் படு வீழ்ச்சி..!

மும்பை: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்திய சந்தைகள் பாதாளத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன.

அதிலும் இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கையும் 75- ஐ தொட்டுள்ளது. அதிலும் கர்நாடகாவை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனாவில் கொடிய தாக்குதலுக்கு முதன்முறையாக பலியாகியுள்ளனர். நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் இந்த நிலையில் இந்திய பங்கு சந்தையில் அதன் எதிரொலி காண ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் படு வீழ்ச்சி கண்டுள்ளது, இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 2,458 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 30,320 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 747 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 8,842 ஆக வர்த்தகமாகி வருகிறது.

கொரோனாவால் பாதிப்பு

கொரோனாவால் பாதிப்பு

சீனாவில் முதன் முதலாக தோன்றிய கொரோனாவில் கோரத்தாண்டவதற்திற்கு இதுவரையில் 4,983 பேர் பலியாகியுள்ளன. இந்த நிலையில் 1,34,748 பேர் தாக்கம் அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் இதன் தாக்கம் சீனாவில் குறைந்து வருகிறது என்றாலும் பன்மடங்கு வேகத்தில் மற்ற நாடுகளில் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இத்தாலி, தென் கொரியா, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது.

சர்வதேச சந்தைகளும் வீழ்ச்சி

சர்வதேச சந்தைகளும் வீழ்ச்சி

ஏன் இந்தியாவிலும் அதன் வேலையை தற்போது காட்ட ஆரம்பித்துள்ளது. கொரோனாவில் தாக்கத்தினால் சர்வதேச சந்தைகள் பலவும் பலத்த அடி வாங்கியுள்ளன. குறிப்பாக டவ் ஜோன்ஸ், ஆசிய பங்கு சந்தைகள் அனைத்தும் பலமான அடியினை வாங்கி வருகின்றன. ஜப்பானின் நிக்கி 8% வீழ்ச்சி கண்டுள்ளது. சிங்கப்பூரின் எஸ்ஜிஎக்ஸ் 7.3% வீழ்ச்சி கண்டுள்ளது. ஷாங்காய் காப்போசைட் 2.8%மும். ஹாங்காங்கின் ஹேங்சேங் 5.3% வீழ்ச்சி கண்டுள்ளன.

சந்தையே முடக்கம்

சந்தையே முடக்கம்

12 வருடங்களில் முதன் முறையாக என்.எஸ்.இ, பிஎஸ்,இ லோவர் சர்க்யூட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுவும் சந்தை தொடங்கிய 45 நிமிடங்களிலேயே சந்தை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில் சென்செக்ஸ் 2,400 வீழ்ச்சியுடன் தொடங்கியிருந்தாலும் தற்போது சென்செக்ஸ் 9.48% வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக 3,090 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 29.687 ஆகவும், இதே நிஃப்டி 966 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 8,624 ஆகவும், கிட்டதட்ட 10% மேல் வர்த்தகமாகியும் வருகிறது.

பங்குகள் வீழ்ச்சி

பங்குகள் வீழ்ச்சி

அதே போல பி.எஸ்.இ, என்.எஸ்.இயில் உள்ள அனைத்து துறை குறியீடுகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. ரிலையன்ஸ், ஐசிஐசிஐ, ஹெச்.டிஎஃப்.சி. ஹெச்.டிஎஃப்.சி பேங்க், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் படு வீழ்ச்சியும் கண்டுள்ளன. குறிப்பாக கோடக் மகேந்திரா, பிபிசிஎல், ஹெச்.சிஎல் டெக். கெயில். டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் படு வீழ்ச்சி கண்டுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+