தேசிய பங்குச் சந்தை (NSE) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் இனி பேங்க் நிஃப்டி-யின் பியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) ஆர்டர்கள் வியாழக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை முடியும் என அறிவித்துள்ளது. இந்த புதிய விதி மாற்றம் ஜூலை 14 முதல் அமலுக்கு வருகிறது என்று தேசிய பங்குச் சந்தை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போதைய விதிகள் படி பேங்க் நிஃப்டி-யின் வார கான்டிராக்ட்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை முடியும், இதேபோல் மாதாந்திர அல்லது காலாண்டு கான்டிராக்ட்கள் மாதத்தின் கடைசி வியாழக்கிழமை முடியும். இந்த நிலையில் ஜூலை மாதம் முதல் கான்டிராக்ட்கள் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை முடியும்.

வெள்ளிக்கிழமை முடியும் நிலையில் முந்தைய நாள் முடியும் இப்புதிய மாற்றம் ஜூலை 14, 2023 ஆம் தேதி முதல் துவங்கும் என தேசிய பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. இதன் மூலம் என்எஸ்ஈ ஜூலை 6 ஆம் தேதி வர்த்தக முடிவில் அனைத்து கான்டிராக்ட்களின் எக்ஸ்பையரி மற்றும் முதிர்வு தேதியை மாற்றி அமைக்கப்படும்.
இதன் தற்போது வர்த்தகத்தில் இருக்கும் F&O கான்டிராக்ட்-கள் அனைத்தும் ஜூலை 13 ஆம் தேதி முடிய உள்ளது. இதேபோல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முடிய உள்ள கான்டிராக்ட் அனைத்தும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முடிய உள்ளது.
சமீபத்தில் மும்பை பங்குச்சந்தை மே 12 ஆம் தேதி சென்செக்ஸ் மற்றும் BANKEX குறியீடுகளின் கான்டிராக்ட்-ன் எக்ஸ்பயரி நாள்-ஐ வியாழக்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமைக்கு மாற்றியது. இதை தொடர்ந்து தற்போது தேசிய பங்குச்சந்தையும் வெள்ளிக்கிழமைக்கு மாறியுள்ளது.
தேசிய பங்குச்சந்தை இதற்கு முன்பு Nifty Midcap Select index-ன் கான்டிராக்ட்களின் எக்ஸ்பயரி நாள்-ஐ வியாழக்கிழமையில் இருந்து புதன் கிழமைக்கு மாற்றியது. Nifty Financial Services F&O ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை முடிகிறது.


Click it and Unblock the Notifications