மும்பை: நமது பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்பனை செய்வதிலேயே பல வகைகள் இருக்கின்றன. ஈக்விட்டி டிரேடிங், இண்ட்ராடே டிரேடிங் மற்றும் F&O என அழைக்கப்படும் Future & Options டிரேடிங். இதில் இண்ட்ராடே மற்றும் Future & Options டிரேடிங் அதிக ஆபத்து கொண்டது. ஏனெனில் பணம் இழப்பு இதில் பெரும் தொகையாக இருக்கும்.
தேசிய பங்குச்சந்தை தலைவரான ஆஷிஷ் குமார் சவுகான் சில்லறை முதலீட்டாளர்கள் Future & Options டிரேடிங் செய்வது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். சில்லறை முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டுகள் வழியாக ஈகிவிட்டிகளில் முதலீடு செய்வதே அவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் ஆஷிஷ் குமார் சவுகான் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், Future & Options முதலீடு செய்வது என்பது சில்லறை முதலீட்டாளர்களை மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடும் என கூறினார்.
அண்மையில் கூட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் சிறப்பு பொருளாதார ஆலோசகரான அனந்த நாகேஸ்வரன் ஆகியோர் சில்லறை முதலீட்டாளர்களுக்கு f&o டிரேடிங் மிகுந்த ஆபத்தானது என கூறினர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு செபி தலைவரான மதாபி புரி பச் சில்லறை முதலீட்டாளர்கள் அதிக அளவில் Future & Options பெட் செய்வதாகவும் இது மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
Future & Options இல் உள்ள ஆபத்துகளை நன்கு அறிந்தவர்களும், அதனை கையாள தெரிந்தவர்களும் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என சவுகான் கேட்டுக் கொண்டுள்ளார். ஆபத்துகளை தெரியாமல் முதலீடு செய்து சில்லறை முதலீட்டாளர்கள் பெருமளவில் பணத்தை இழந்தால் பின்னால் பெரிய சிக்கலுக்கு வழிவகுக்கும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தியாவில் அண்மைக்காலமாகவே Future & Options டிரேடிங் என்பது தொடர்ந்து பிரபலமாகி வருகிறது.
Future & Options டிரேடிங்கில் அதிக லாபத்தை பெற முடியும் என்ற ஒரு தவறான தகவல் முதலீட்டாளர்கள் மத்தியில் பரப்பப்படுகிறது. அதில் உள்ள ஆபத்துகள் குறித்து பெருமளவில் சொல்லப்படுவதில்லை. 2019 மார்ச் மாதத்தில் இந்தியாவில் Future & Options டிரேடிங்கின் மதிப்பு 217 லட்சம் கோடியாக தான் இருந்தது ,அதுவே 2024 மார்ச்சில் 8,740 கோடியாக உயர்ந்துள்ளது. ஈக்விட்டி பிரிவில் ஒரு நாளைக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகமாகிறது என்றால், ஆப்ஷன் பிரிவில் சராசரியாக ஒரு நாளைக்கு 330 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறுகிறது.
Future & Options என்பது ஒரு ஒப்பந்தம் அடிப்படையிலான பங்கு வர்த்தகமாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கு இந்த தேதிக்குள் இந்த அளவை எட்டலாம் அல்லது குறையலாம் என பெட் வைத்து அதன் அடிப்படையில் நடை பெறக்கூடிய ஒரு வர்த்தகம். இதில் ஈடுபடக்கூடிய பெரும்பாலானவர்கள் நஷ்டத்தில்தான் வெளியே வருகின்றனர்.
எனவே தான் இதன் ஆபத்தை உணராமல் முதலீட்டாளர்கள் குறிப்பாக சில்லறை முதலீட்டாளர்கள் இவற்றில் நுழைந்து பணத்தை இழந்து விடக்கூடாது என தேசிய பங்கு சந்தை தலைவர் சவுகான் குறிப்பிட்டுள்ளார். செபி வெளியிட்ட ஒரு தகவலின் அடிப்படையில் Future & Options பிரிவில் முதலீடு செய்பவர்களில் 89 சதவீதம் பேர் நஷ்டம் அடைகின்றனர் என தெரிவித்தது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications