இந்தியப் பங்குச்சந்தை சுமார் 8 வாரத் தொடர் சரிவுடன் அக்டோபர் மாதத்திற்குள் நுழைந்துள்ளது, பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. காரணம், கடந்த 25 வருடத்தில் சென்செக்ஸ், நிஃப்டி தொடர்ந்து 8 வாரம் சரிந்த வரலாறு கிடையாது.
இதேபோல் இந்த அக்டோபர் மாதம் என்பது பங்குச்சந்தைக்கு ஒரு துர்தஷ்டவசமான மாதம் என்றால் மிகையில்லை 1987ல் பிளாக் மண்டே கிராஷ் - இதில் டாவ் ஜோன்ஸ் ஒரே நாளில் 22.6 சதவீதம் சரிந்தது, 1929ல் வால் ஸ்ட்ரீட் கிராஷ் - இதில் டாவ் ஜோன்ஸ் 28-29 ஆம் தேதிகளில் மொத்தம் 24 சதவீதம் சரிந்து கருப்பு வியாழன், கருப்பு வெள்ளி எனப் பெயர் பெற்றது.

இதேபோல் எல்லோரும் பார்த்த, அறிந்த 2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடியும் அக்டோபர் மாதம் தான் ஏற்பட்டது, இதில் எஸ்அண்ட்பி 500 குறியீடு அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 17 சதவீதம் சரிந்தது, இந்த சரிவு தான் அமெரிக்க வங்கித்துறையை மொத்தமாக காலி செய்தது.
இப்படி அனைத்து முக்கிய நிகழ்வுகளும் இந்த அக்டோபர் மாதத்தில் தான் நடந்தது. செப்டம்பர் மாதத்தின் துவக்கத்தில் 76,944 புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ் 30ஆம் தேதி சுமார் 5.80 சதவீதம் சரிந்து சுமார் 72,480.29 புள்ளிகளுக்கு சரிந்துள்ளது. இதேபோல் நிஃப்டி 6.7 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
இந்த நிலையில் அக்டோபர் மாதத்தை முக்கிய வரலாற்று நிகழ்வுகள் காரணமாகச் சர்வதேச முதலீட்டு சந்தையில் October Effect மூலம் சரிவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் செப்டம்பர் மாதம் தான் மிகவும் மோசமான மாதமாக இருந்து வருகிறது, சில முக்கிய நிகழ்வுகள் அக்டோபர் மாதத்தில் நடத்திருக்கும் காரணத்தால் இந்த கண்ணோட்டம் உள்ளது.
அக்டோபர் எப்கெட் பெரும்பாலும் அமெரிக்கா சந்தையை மட்டுமே சார்ந்து காணப்படுகிறது, இந்தியச் சந்தையைப் பொறுத்த வரையில் கடந்த 10 வருடத்தில் 10ல் 7 முறை நிஃப்டி உயர்வுடன் முடிந்துள்ளது. அக்டோபர் மாதங்களில் சராசரியாக 6 சதவீதம் லாபத்தை நிஃப்டி பதிவு செய்துள்ளது. வங்கி நிஃப்டியை பார்க்கும் போது கடந்த 20 வருடத்தில் 15 வருடம் அக்டோபர் மாதம் லாபத்தில் உள்ளது.
பொதுவாகச் சர்வதேச முதலீட்டுச் சந்தையின் பாதிப்பால் இந்தியச் சந்தை சரிவது வழக்கம் ஆனால் ஆபத்தை குறைக்க FII முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் அக்டோபர் மாதத்தை உயர்வுடன் முடிக்கிறோம். ஆனால் தற்போது அப்படி இருக்காது என பலரும் கணித்துள்ளனர்.
காரணம் 25 ஆண்டுகளில் இல்லாதது போல் 8 வாரம் தொடர்ந்து சரிவைச் சந்தித்துள்ளது சென்செக்ஸ், நிஃப்டி. மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் அளவுக்கு இந்தியச் சந்தையில் ஏஐ துறை சார்ந்த முதலீட்டுக்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது.
மேலும் ஈரான் போர், எல் நினோ ஆகியவற்றால் நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும் பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தால் FII முதலீட்டாளர்கள் நிஃப்டி இன்டெக்ஸ் குறியீட்டின் மீதான Short பொசிஷனை 184000ல் இருந்து 267,000 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அக்டோபர் மாதம் மோசமாக இருக்கும் என்பதற்கான சிக்னல் முன்கூட்டியே வந்துள்ளது.


Click it and Unblock the Notifications


