2017ல் தொடங்கப்பட்ட ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் ஒரு மின்சார வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமாகும். மேலும் இந்நிறுவனம் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி பேக்குகள், மோட்டார்கள் மற்றும் வாகன பிரேம்கள் உள்ளிட்ட முக்கிய பாகங்களையும் உற்பத்தி செய்கிறது. பெரிய அளவில் வளர்ச்சி காணும் எதிர்பார்க்கப்பட்ட இந்நிறுவனம், சமீபகாலமாக பல்வேறு சிக்கல்களில் சிக்கி தவித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் நேற்று தனது 2025 மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டது. நிதிநிலை முடிவுகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது அந்நிறுவனத்துக்கு அமைந்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்துக்கு கடந்த மார்ச் காலாண்டில் ரூ.870 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் இரு மடங்குக்கும் அதிகமாகும். 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.416 கோடி இழப்பு ஏற்பட்டு இருந்தது.

2025 மார்ச் காலாண்டில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 62 சதவீதம் குறைந்து ரூ.611 கோடியாக சரிவடைந்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் விற்பனை படுமோசமாக அமைந்ததே இதற்கு காரணம். 2025 மாா்ச் காலாண்டில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 51,375 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 55 சதவீதம் வீழ்ச்சியாகும். 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் 1,15,386 வாகனங்களை டெலிவரி செய்து இருந்தது.
கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் மோசமாக இருந்ததால், பங்குச் சந்தையில் இன்று ஓலா எலக்ட்ரிக் நிறுவன பங்கின் விலை பலத்த அடி வாங்கியது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே ஓலா எலக்ட்ரிக் நிறுவன பங்கின் விலை சுமார் 10 சதவீதம் வீழ்ச்சி கண்டு ரூ.48.07க்கு சென்றது. பங்கின் விலை ரூ.50க்கும் கீழ் சென்றதால், முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்கில் வர்த்தகம் செய்யலாமா வேண்டாமா என்று குழப்பம் அடைந்துள்ளனர். அவர்களின் சந்தேகத்தை போக்கும் வகையில் நிபுணர்கள் ஓலா எலக்ட்ரிக் நிறுவன பங்கு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
கோடக் இன்ஸ்டிடியூனல் ஈக்விட்டீஸ் நிறுவனத்தின் ஆய்வாளர்களின் கணிப்பின்படி, ஓலா எலக்டரிக் பங்கின் விலை ரூ.30 வரை சரியக்கூடும். இது பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இருந்த ஓலா பங்கின் விலையிலிருந்து 43 சதவீத சரிவைக் குறிக்கிறது. மேலும் ஓலா எலக்ட்ரிக் நிறுவன பங்கு மீதான மதிப்பீட்டை விற்பனை என குறைத்துள்ளது. வாகன சந்தையில் அதிகரித்து வரும் போட்டி மற்றும் பிராண்ட் ஈக்விட்டி பலவீனமடைவதால் தொடர்ந்து EBITDA இழப்புகளை சந்திக்கும் என்று எதிாபார்ப்பதே மதிப்பீட்டை குறைப்பதற்கு முக்கிய காரணம்.
லட்சுமி ஸ்ரீ இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் அன்ஷுல் ஜெயின் கூறுகையில், வாராந்திர சார்ட்டில் ஓலா நிறுவனம் குறைந்த உயர்வையும், குறைந்த தாழ்வையும் உருவாக்கி வருகிறது. அதன் வீழ்ச்சி அமைப்பை தக்க வைத்துக் கொள்கிறது. இந்த போக்கை மாற்றியமைக்க வேண்டுமானால் பங்கு விலை ரூ.75க்கு மேல் உயர்ந்திருக்க வேண்டும். இது தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமில்லை.
பலவீனமான காலாண்டு முடிவுகள் விற்பனை அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பிடத்தக்க நேர்மறையான தூண்டுதல்கள் வெளிப்படாவிட்டால், நடுத்தர கால வர்த்தகர்களுக்கு ரூ.24 ஆதரவு மண்டலத்தை நோக்கி ஒரு கீழ்நோக்கிய நீட்டிப்பு அதிக சாத்தியமான இலக்காக உள்ளது என்று தெரிவித்தார்.
மின்னல் வேகத்தில் உயர்ந்த சுஸ்லான் எனர்ஜி பங்கு .. என்ன காரணம் தெரியுமா?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

எரிபொருள் நெருக்கடி.. அரசு ஊழியர்களின் சம்பளம் 30% வரை கட்..!!



Click it and Unblock the Notifications