புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை சேர்ந்த நிறுவனம் சுஸ்லான் எனர்ஜி. நம் நாட்டில் காற்றாலை மின் உற்பத்தியில் பெரிய அளவில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் இந்நிறுவனமும் ஒன்றாகும். பங்குச் சந்தையில் தற்போது அதிகம் பேசப்படும் பங்குகளில் ஒன்றாக சுஸ்லான் எனர்ஜி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் அளித்து வருவதே இதற்கு முக்கிய காரணம்.
ஒத்திவைக்கப்பட்ட வரி
சுஸ்லான் எனர்ஜி நிறுவனம் நேற்று தனது மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டது. 2025 மார்ச் காலாண்டில் சுஸ்லான் எனர்ஜி நிறுவனம் ஒட்டுமொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,181 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சதவீதம் அதிகமாகும். 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.254 கோடி ஈட்டியிருந்தது. ரூ.600 கோடி ஒத்திவைக்கப்பட்ட வரி ஆதாயத்தால் இந்நிறுவனத்தின் நிகர லாபம் அதிகரித்துள்ளது.

2025 மார்ச் காலாண்டில் சுஸ்லான் நிறுவனத்தின் வருவாய் ரூ.3,773.50 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டைக் காட்டிலும் சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.2,178.20 கோடியாக இருந்தது. கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் 573 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திறனை நிறுவியுள்ளது. மேலும் அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு லாப வரம்பு 18.3 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.
எதிரொலி
பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நிறைவடைந்தபிறகு, சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் வெளியானது. சுஸ்லான் எனர்ஜியின் லாபம் மற்றும் வருவாய் சிறப்பாக இருப்பதால், அதன் தாக்கம் இன்றைய பங்கு வர்த்தகத்தின் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே இன்று இந்நிறுவன பங்குகளின் விறுவிறுவென ஏற்றம் கண்டது.
கடந்த ஒரு மாதத்தில் சுஸ்லான் எனர்ஜி பங்கு விலை 16 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஒராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 44 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
நுவாமா மதிப்பீடு
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகத்தின் இடையே சுஸ்லான் எனர்ஜி பங்கின் விலை 13.5 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ரூ.74.30 வரை உயர்ந்தது. முதலீட்டு நிறுவனமான நுவாமா கூறுகையில் சுஸ்லான் எனர்ஜி நிறுவனம் மீது நாங்கள் நீண்ட காலமாக நேர்மறையாக இருக்கிறோம் என்று தெரிவித்தது. மேலும் சுஸ்லான் எனர்ஜி குறித்த ஹோல்ட் (வைத்திருத்தல்) என்ற மதிப்பீட்டில் எந்த மாற்றத்தையும் நுவாமா செய்யவில்லை.
இரண்டு இருந்தா ஒன்னு போனஸ்.. டிவிடெண்டும் உண்டு.. சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் அதிரடி..!!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications