சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (எஸ்ஏஎம்ஐஎல்) நிறுவனம் வாகன உதிரிபாகங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. பிஎஸ்இ 100 இன்டெக்ஸில் இந்நிறுவன பங்கு இடம் பிடித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனமாகும். சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது 2025 மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. மேலும் டிவிடெண்டு மற்றும் போனஸ் பங்கும் அறிவித்துள்ளது.
லாபம்
2025 மார்ச் காலாண்டில் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம் நிகர லாபமாக ரூ.1,050.50 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 23.43 சதவீதம் குறைவாகும். 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.1,372 கோடி ஈட்டியிருந்தது. கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் வீழ்ச்சி கண்டுள்ள போதிலும், வருவாய் அதிகரித்துள்ளது.

போனஸ் பங்கு
சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம் 2025 மார்ச் காலாண்டில் வருவாயாக ரூ.29,317 கோடி ஈட்டியுள்ளது. இது 2024 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 8.34 சதவீதம் உயர்வாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.27,058 கோடி ஈட்டியிருந்தது. இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 1:2 விகிதத்தில் போனஸ் பங்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது ஒவ்வொரு 2 பங்குகளுக்கு ஒரு பங்கு போனஸாக வழங்கப்படும். இது பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது, அஞ்சல் வாக்கெடுப்பு வாயிலாக ஒப்புதல் பெறப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிவிடெண்டு
இந்நிறுவனம் 2024-5ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.0.35 இறுதி டிவிடெண்டாக அறிவித்துள்ளது. இது 2025 ஆகஸ்ட் 28ம் தேதியன்று நடைபெறும் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, ரூ.1 லட்சம் முக மதிப்புள்ள பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ.8,500 கோடி வரை நிதி திரட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் லாபம் சரிவு கண்டுள்ள போதிலும், தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை உயர்ந்தது.
பங்கு விலை ஏற்றம்
மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவன பங்கின் விலை 2 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. இன்று பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 4 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ரூ.158.65 வரை சென்றது.
போனஸ் பங்கு அறிவித்த ஷில்சார் டெக்னாலஜிஸ்.. முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications