போனஸ் பங்கு அறிவித்த ஷில்சார் டெக்னாலஜிஸ்.. முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்..

ஷில்சார் டெக்னாலஜிஸ் லிமிடெட் மின்மாற்றிகள், மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு மின்மாற்றிகள் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறது. ஸ்மால் கேப் நிறுவனமான ஷில்சார் டெக்னாலஜிஸ் லிமிடெட் தொடர்ந்து லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்க விஷயமாகும். மேலும் இந்நிறுவன பங்கு மல்டிபேக்கர் வருமானத்தை வழங்கியுள்ளதால் முதலீட்டாளர்களால் கவனிக்கப்படும் பங்காக உள்ளது.

2க்கு 1
ஷில்சார் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு 2:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்கு வழங்குவதாக அறிவித்தது. அதாவது, முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு இரண்டு பங்குக்கும் ரூ.10 முக மதிப்பு கொண்ட ஒரு ஈக்விட்டி பங்கு போனஸாக வழங்கப்படும். உதாரணமாக ஒருவர் ஷில்சார் டெக்னாலஜிஸின் 10 பங்குகளை வைத்திருந்தால் 5 பங்குகள் போனஸாக கிடைக்கும்.

போனஸ் பங்கு அறிவித்த ஷில்சார் டெக்னாலஜிஸ்.. முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்..

போனஸ் பங்கு வெளியீட்டுக்கான பதிவு தேதியை ஷில்சார் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, போனஸ் பங்குகளை பெறுவதற்கு உரிமையுள்ள பங்குதாரர்களின் தகுதியை உறுதி செய்வதற்கான பதிவு தேதியாக 2025 ஜூன் 5ம் தேதியை நிர்ணயம் செய்துள்ளது.

லாபம்
2025 மார்ச் காலாண்டில் ஷில்சார் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிகர வருவாய் சென்ற ஆண்டின் 121 சதவீதம் உயர்ந்து ரூ.232 கோடியாக உயர்ந்துள்ளது. அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 120 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.55 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2024-25ம் நிதியாண்டில் ஷில்சார் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிகர வருவாய் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 60 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.146.85 கோடியாக உயர்ந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தகத்தின் முடிவில் ஷில்சார் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.56 சதவீதம் உயர்ந்து ரூ.7,536.95ஆக இருந்தது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.5,748 கோடியாக உள்ளது.

பங்கு விலை
2024 டிசம்பர் 6ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ஷில்சார் டெக்னாலஜிஸ் பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.8,899.00ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு காண தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.4,206.00க்கு சென்றது. அதன் பிறகு இப்பங்கின் விலை சரிவிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறது.

நீண்ட கால அடிப்படையில் ஷில்சார் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஷில்சார் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 15,000 சதவீதம் பெருக்கியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 715 சதவீதம் அதிகரித்துள்ளது.

பங்கு விலையோ ரூ.25க்கும் குறைவு: 5 ஆண்டுகளில் 450% லாபம் கொடுத்த ஸ்மால் கேப் பங்கு NECC..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+