மின்சார பேருந்துகள், லாரிகள் மற்றும் கலப்பு பாலிமர் இன்சுலேட்டர்கள் தயாரிக்கும் ஒலக்ட்ரா கிரீன்டெக் நிறுவனம் (Olectra Greentech Ltd), முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் செப்டம்பர் 20 டிவிடெண்ட் ரெக்கார்டு தேதியாக நிர்ணயம் செய்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த ஆட்டோ மற்றும் இ-மொபிலிட்டி துறை பங்குகள் 2,374% க்கும் அதிகமான வருமானத்தை வழங்கியுள்ளது. இதன் ஒரு பங்கு ரூ.66.85 இலிருந்து ரூ.1,654 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில், பங்கு 2.61% உயர்ந்து ரூ.1,646.25 ஆக இருந்தது. இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.13,512 கோடியாக உள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்பு இதில் 1 லட்சம் ரூபாயை முதலீடு செய்தவர்கள் தற்போது 24 லட்சத்தை பெற்றிருப்பார்கள். பங்குச்சந்தையின் தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த பங்கின் ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் (RSI) 66.1 ஆக இருந்தது. இது நடுத்தர வரம்பில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. அதேசமயம், மணி ஃப்ளோ இண்டெக்ஸ் (MFI) 78 ஆக இருந்தது. இது பங்கு அதிகப்படியான கொள்முதல் மட்டத்தில் (overbought levels) இருப்பதைக் குறிக்கிறது.
இந்த பங்கு அதன் 52 வார குறைந்த விலையான ரூ.973.65 இலிருந்து கிட்டத்தட்ட 69% உயர்ந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 57% அதிகரித்துள்ளது. ஒரு வருட பீட்டா 1.6 உடன், இந்த பங்கு அதிக நிலையற்ற தன்மையைக் கொண்டுள்ளது.
ஒலக்ட்ரா கிரீன்டெக் மின்சார மொபிலிட்டி மற்றும் கலப்பு இன்சுலேட்டர் துறையில் ஒரு முக்கிய நிறுவனமாகும். இந்நிறுவனம் மின்சார பேருந்துகள், மின்சார லாரிகள் மற்றும் கலப்பு பாலிமர் இன்சுலேட்டர்களை தயாரிக்கிறது. இதன் வாடிக்கையாளர்களில் மாநில மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள், மின் கழகங்கள் மற்றும் பன்னாட்டு உள்கட்டமைப்பு நிறுவனங்கள் அடங்கும்.இந்த நிறுவனம் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, நைஜீரியா, மொசாம்பிக், கென்யா மற்றும் ஜாம்பியா போன்ற வெளிநாட்டு சந்தைகளிலும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications