டெல்லி: மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளது. இதனை அடுத்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை மோடி அரசு வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இயற்கை எரிவாயுவை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவருவது தொடர்பான ஆலோசனையை மீண்டும் முன்னெடுத்துள்ளது. இவ்வாறு இயற்கை எரிவாயு ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படும் பட்சத்தில் என்னென்ன நிறுவனங்கள் கணிசமான அளவு வளர்ச்சியை காணும் என மார்கன் ஸ்டான்லி தரகு நிறுவனம் கணித்துள்ளது.

குறிப்பாக இயற்கை எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களான ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இந்த கொள்கை மாற்றத்தின் மூலம் கணிசமான பலன்களை பெறும் என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஓஎன்ஜிசி நிறுவனத்தின் வருமானம் மதிப்பு 5% ,ஆயில் இந்தியா நிறுவனத்தின் வருமானம் 3 - 4% வரை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வரம்பிற்குள் இயற்கை எரிவாயு கொண்டு வரப்பட்டால், இந்நிறுவனங்களின் செலவினங்கள் குறைந்து லாபம் அதிகரிக்கும் என விளக்கம் தரப்படுகிறது.
இயற்கை எரிவாயு துறையில் செயல்படக்கூடிய மற்ற நிறுவனங்களும் இதன் மூலம் பெரிய அளவில் பலனடையும் என தெரிவித்துள்ளது. இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் மற்றும் குஜராத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் கணிசமான வளர்ச்சியை காண்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும், நீண்ட கால அடிப்படையில் இந்த எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் உயரும் என்றும் மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
கெயில், குஜராத் கேஸ், ஓஎன்ஜிசி, ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகளுக்கு 'ஓவர் வெயிட்' என்ற மதிப்பீட்டினை இந்த நிறுவனம் தந்துள்ளது.
மார்கன் ஸ்டான்லியின் கணிப்பின் அடிப்படையில் பார்க்கும்போது கெயில் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 255 ரூபாய் என்ற அளவில் உயரக்கூடும் என தெரிவித்துள்ளது ஜூன்12ஆம் தேதி கெயில் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 217 ரூபாய் ஆகும்.
அதாவது 17.5% வளர்ச்சி அடையும் என தெரிகிறது. அதேபோல ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு தற்போது 277 ரூபாயாக இருக்கும் நிலையில் அது 302 ரூபாயாக உயரம் ,9% வரை பங்கு மதிப்பு அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆயில் இந்தியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு தற்போது 663 ரூபாய் என்ற நிலையில் இருக்கிறது. இது 12 % வரை உயர்ந்து 745 ரூபாய் என்ற அளவில் வளர்ச்சி அடையும் என மார்கன் ஸ்டான்லி கூறியுள்ளது. அதேபோல பெட்ரோனெட் எல்என்ஜி நிறுவனத்தின் பங்கு மதிப்பும் உயரும் என தெரிவித்துள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!



Click it and Unblock the Notifications