நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்கு சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன..
இது தற்போது உலகின் பல பகுதிகளிலும் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா பரவலானது மீண்டும் பொருளாதாரத்தினை சரிவுக்கு கொண்டு செல்ல வழிவகுக்குமோ என்ற கவலையும் எழுந்துள்ளது.
இதனால் கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடும்போது அன்னிய முதலீடுகளின் வரத்தும் குறைந்துள்ளது. சொல்லப்போனால் இருக்கும் முதலீடுகளையே முதலீட்டாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்ற தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக சந்தை தொடர் அழுத்தத்தில் காணப்படுகிறது.
இதுவும் ஒரு காரணம்
கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவில் முடிவடைந்ததையடுத்து, இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகளும் சரிவில் காணப்பட்டன. மாறாக பாதுகாப்பான முதலீடுகளை முதலீட்டாளர்கள் நாடத் தொடங்கியுள்ளனர். இதனால் இந்திய பங்கு சந்தைகளும் சரிவிலேயே காணப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சரிவில் தான் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 503.57 புள்ளிகள் குறைந்து, 52,636.49 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 141.20 புள்ளிகள் குறைந்து, 15,782.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பிபிசிஎல், என்.டி.பி.சி, டிவிஸ் லேப், ஐஓசி, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, பஜாஜ் ஆட்டோ, இந்தஸிந்த் வங்கி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள என்.டி.பி.சி, டைட்டன் நிறுவனம், ரிலையன்ஸ், நெஸ்டில், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, பஜாஜ் ஆட்டோ, இந்தஸிந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
சந்தை நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறி வரும் நிலையில், மீண்டும் ஏற்றம் காண வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 396.54 புள்ளிகள் குறைந்து, 52,753.59 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 101.95 புள்ளிகள் குறைந்து, 15,821.45 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அவுட் – ரத்தக் களறியான பங்குச்சந்தை-முதலீட்டாளர்களுக்கு பேரிடி?



Click it and Unblock the Notifications