நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் படு சரிவில் காணப்படுகின்றன. இது பரவி வரும் இரண்டாம் கட்ட கொரோனாவுக்கு மத்தியில், மீண்டும் இந்தியாவில் பல மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இது தற்போது தான் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள பொருளாதாரத்தினை மீண்டும், சரிவுக்கு கொண்டு செல்ல வழிவகுக்குமோ என்ற கவலையும் எழுந்துள்ளது.
இதனால் கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடும்போது அன்னிய முதலீடுகளின் வரத்தும் குறைந்துள்ளது. இருக்கும் முதலீடுகளையே முதலீட்டாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்ற தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக சந்தை தொடர் அழுத்தத்தில் காணப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சரிவில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 491.98 புள்ளிகள் குறைந்து, 48,340.05 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 276.50 புள்ளிகள் குறைந்து, 14,341.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 1061.72 புள்ளிகள் குறைந்து, 47,770 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 359.90 புள்ளிகள் குறைந்து, 14,258 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 183 பங்குகள் சற்று ஏற்றத்திலும், 615 பங்குகள் சரிவிலும், 53 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டிஸ், சிப்லா, சன் பார்மா, டிவிஸ் லேப்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா, இந்தஸிந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டிஸ், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே, ஆக்ஸிஸ் வங்கி, கோடக் மகேந்திரா, இந்தஸிந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 43 சரிவில், 74.78 ரூபாயாக தொடங்கியது. இது முந்தைய அமர்வில் 74.35 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 1206.76 புள்ளிகள் குறைந்து, 47,625.27 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 330.80 புள்ளிகள் குறைந்து, 14,287.05 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications