நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன.
இது கடந்த அமர்வில் அமெரிக்க பங்குச் சந்தையானது சரிவில் முடிவடைந்த நிலையில், ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்படுகின்றன. எப்படியிருப்பினும் அமெரிக்க டாலரின் மதிப்பானது 16 மாத உச்சத்தினை தொட்டுள்ளது.
ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிகப்படலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது.
பணவீக்கம் பற்றிய கவலை
பல நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாத நிலையில், இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் எதிரொலியும் சந்தையில் இருக்கலாம் என்ற கவலையும் இருந்து வருகிறது. எப்படியிருப்பினும் இந்திய சந்தையினை பொறுத்தவரையில் நவம்பர் 1 - 18 வரையிலான காலகட்டத்தில் இந்திய சந்தையில் 19,712 கோடி ரூபாய் நிகர முதலீடுகள் வந்துள்ளது. அதே போல 12,437 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வெளியேறியுள்ளது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் 131.30 புள்ளிகள் குறைந்து, 59,504.71 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 30.50 புள்ளிகள் குறைந்து, 17,734.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 202.56 புள்ளிகள் குறைந்து, 59,433.45 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 56.30 புள்ளிகள் குறைந்து, 17,708.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1,226 பங்குகள் ஏற்றத்திலும், 790 பங்குகள் சரிவிலும், 161 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றது. மற்ற குறியீடுகள் 1% கீழாக சரிவில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், விப்ரோ, இந்தஸ் இந்த் வங்கி, பிரிட்டானியா, சிப்லா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ரிலையன்ஸ், ஓ.என்.ஜி.சி, கோல் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், இந்தஸ் இந்த் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ரிலையன்ஸ், பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசுகி, ஹெச்.சி.எல் டெக், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 409.55 புள்ளிகள் குறைந்து, 59,226.46 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 110.50 புள்ளிகள் குறைந்து, 17,654.30 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
ரிலையன்ஸ், பார்தி ஏர்டெல் பங்குகள் இன்று கவனிக்க வேண்டிய பங்குகளாக உள்ளன.
More From GoodReturns

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!



Click it and Unblock the Notifications