இந்திய சந்தை எப்போதெல்லாம் சரிகின்றதோ அப்போதெல்லாம் முதலீடு செய்யலாம். சந்தையானது ஏற்றம் காணும் என்று நிபுணர்கள் கூறிய வார்த்தைகள் எல்லாம் இன்று உண்மையாகி விட்டது. தொடர்ந்து இந்திய சந்தையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், இன்று மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன.
ஜெரோம் பவலில் பேச்சுக்கு பின்னர் அமெரிக்க சந்தைகள் கடந்த அமர்வில் வரலாற்று உச்சத்தில் முடிவடைந்தன. இதனையடுத்து இன்று ஆசிய சந்தைகளும் உச்சத்தில் தான் காணப்பட்டன. இதற்கிடையில் இந்திய சந்தையும் இன்று புதிய வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன.
நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றன. கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து புதிய உச்சத்தினை எட்டி வரும் நிலையில், இன்றும் சற்று ஏற்றம் கண்டுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு கிடைத்த ஜாக்பாட் எனலாம்.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 198.72 புள்ளிகள் அதிகரித்து, 56,323.44 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 47 புள்ளிகள் அதிகரித்து, 16,752.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 321.99 புள்ளிகள் அதிகரித்து, 56,446.71 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 103.30 புள்ளிகள் அதிகரித்து, 16,808.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,535 பங்குகள் ஏற்றத்திலும், 339 பங்குகள் சரிவிலும், 107 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் பெரும்பாலான குறியீடுகளும் பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ஐடி குறியீடு மட்டும் சற்று சரிவில் காணப்படுகின்றது. குறிப்பாக பிஎஸ்இ மெட்டல்ஸ் கிட்டதட்ட 3% ஏற்றத்திலும், பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் கூட்ஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாகவும், மற்றவை 1% கீழாகவும் ஏற்றத்தில் காணப்படுகின்றது.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, லார்சன், பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே நெஸ்டில், டெக் மகேந்திரா, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், லார்சன், பார்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டெக் மகேந்திரா, நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
ரூபாய் நிலவரம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது, 22 பைசா அதிகரித்து 73.46 ரூபாயாக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வில் 73.68 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
இதற்கிடையில் சென்செக்ஸ் 566.52 புள்ளிகள் அதிகரித்து, 56,691.24 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 164.20 புள்ளிகள் அதிகரித்து, 16,869.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications