இரண்டாவது நாளாகவும் எகிறிய இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. !

நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. கடந்த வாரத்தில் பலத்த சரிவினைக் கண்டிருந்த நிலையில், இன்றோடு தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக ஏற்றம் கண்டு இருப்பது மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்றே ஆறுதலை கொடுத்துள்ளது.

இது அமெரிக்க அரசின் ஊக்கத்தொகை பற்றிய நம்பிக்கை குறித்த கவலைகள் இருந்தாலும், அதிகரித்து வரும் பத்திர விளைச்சல் அந்த நம்பிக்கையை கூட்டியுள்ளது.

இதற்கிடையில் அமெரிக்க சந்தைகள் ஏற்ற இறக்ககத்துடன் முடிவடைந்தன. இதற்கிடையில் டாலரின் மதிப்பானது மூன்றரை மாத உச்சத்தில் காணப்பட்டது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 152.62 புள்ளிகள் அதிகரித்து, 50,593.69 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 23.20 புள்ளிகள் அதிகரித்து, 14,932.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 462.11 புள்ளிகள் அதிகரித்து, 50,903.18 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 139.20 புள்ளிகள் அதிகரித்து, 15,095.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1100 பங்குகள் ஏற்றத்திலும், இதே 249 பங்குகள் சரிவிலும், 52 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ தவிர, மீதமுள்ள அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள கிரசிம், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஹெச்டிஎஃப்சி லைஃப், ஸ்ரீ சிமெண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பிபிசிஎல், கெயில், யுபிஎல், ஓஎன்ஜிசி, ஐஓசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்டிஎஃப்சி வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் நிறுவனம், பஜாஜ் பைனான்ஸ் ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஓஎன்ஜிசி, பவர் கிரிட் கார்ப், இந்தஸிந்த் வங்கி, நெஸ்டில், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 348.39 புள்ளிகள் அதிகரித்து, 50,789.46 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 112.45 புள்ளிகள் அதிகரித்து, 15,068.65 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

எதிர்பார்ப்பினை விட பொருளாதாரம் விரைவாக மீண்டு வரும் நிலையில், அது சந்தைக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+