முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. முதல் நாளே வேகமெடுக்கும் சென்செக்ஸ்..தூள் கிளப்பி வரும் காடில்லா!

நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றன. கடந்த வாரம் முதல் கொண்டே தொடர்ந்து புதிய உச்சத்தினை எட்டி வரும் நிலையில், இன்றும் சற்று ஏற்றம் கண்டுள்ளது. இது முதலீட்டாளர்கள் நல்ல லாபம் என்றே கூறலாம். சொல்லப்போனால் முதலீட்டாளர்களுக்கு கிடைத்த ஜாக்பாட் எனலாம்.

இது அமெரிக்க சந்தைகள் கடந்த அமர்வில் உச்சத்தில் முடிவடைந்த நிலையில், ஆசிய சந்தைகள் சிலவும் தொடர்ந்து ஏற்றத்தில் காணப்படுகின்றன.

இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் தொடர்ந்து ஏற்றத்தில் காணப்படுகிறது.

சந்தையில் அழுத்தம்

சந்தையில் அழுத்தம்

எப்படியிருப்பினும் அமெரிக்காவில் அதிகரித்து வரும் உருமாற்றம் அடைந்துள்ள கொரோனாவின் தாக்கம் மத்தியில், இது இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இது சந்தையில் மேற்கொண்டு அழுத்தத்தினை கொடுக்கலாம் என்ற நிலையே நிலவி வருகின்றது. இதனால் இந்த ஏற்றம் தொடருமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 133.81 புள்ளிகள் அதிகரித்து, 55,463.13 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 104.50 புள்ளிகள் அதிகரித்து, 16,555 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 384.11 புள்ளிகள் அதிகரித்து, 55,713.43 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 111.60 புள்ளிகள் அதிகரித்து, 16,562.10 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,085 பங்குகள் ஏற்றத்திலும், 507 பங்குகள் சரிவிலும், 115 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் பெரும்பாலான குறியீடுகளும் பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ஐடி குறியீடு 2% ஏற்றத்திலும், பிஎஸ்இ டெக், பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ், பிஎஸ்இ டெக் குறியீடுகள் 1% மேலாகவும் ஏற்றம் கண்டுள்ளது. எனினும் பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் கூட்ஸ், பிஎஸ்இ எஃப்.எம்,சி.ஜி, நிஃப்டி ஆட்டோ உள்ளிட்ட குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹெச்.சி.எல் டெக், டெக் மகேந்திரா, விப்ரோ, ஹிண்டால்கோ, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஈச்சர் மோட்டார்ஸ், பவர் கிரிட் கார்ப், டாடா கன்சியூமர் புராடக்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்.சி.எல் டெக், டெக் மகேந்திரா, டிசிஎஸ், டாடா ஸ்டீல், லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், பஜாஜ் ஆட்டோ, ஹெச்.யு.எல், எம் & எம், ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

காடில்லா ஹெல்த்கேர் பங்குகள்

காடில்லா ஹெல்த்கேர் பங்குகள்

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 324.40 புள்ளிகள் அதிகரித்து, 55,653.72 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 83.35 புள்ளிகள் அதிகரித்து, 16,533.85 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

இன்று காடில்லா ஹெல்த்கேர் நிறுவன பங்குகள் 7% வரையில் காலையில் அதிகரித்து காணப்பட்டது. இது நிறுவனம் அவசர தேவைக்கு (EUA) பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், இந்த பங்கின் விலையானது பட்டையை கிளப்பிக் கொண்டுள்ளது. தற்போது இந்த பங்கின் விலையானது 3.37% அதிகரித்து, 551 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+