ஜாக்பாட் தான்.. முதல் நாளே ஏற்றத்தில் சந்தைகள்.. சென்செக்ஸ் 61,000-க்கு அருகில் வர்த்தகம்..!

நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.

இது கடந்த அமர்வில் அமெரிக்க பங்குச் சந்தையானது சற்று ஏற்றத்தில் முடிவடைந்த நிலையில், டாலரின் மதிப்பும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இதற்கிடையில் இன்று ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.

இதற்கிடையில் இந்திய சந்தையும் தற்போது ஏற்றத்தில் காணப்படுகின்றது. தொடக்கத்திலும் இன்று ஏற்றத்தில் தான் தொடங்கியது.

கவனிக்க வேண்டிய விஷயம்

கவனிக்க வேண்டிய விஷயம்

கோல்டுமேன் சாச்சஸ் ஆய்வு நிறுவனம் இந்தி ஈக்விட்டிகள் மீதான தரத்தை குறைத்துள்ளது. முன்னதாக மார்கன் ஸ்டான்லி, நோமுரா மற்றும் யுபிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களும், இந்திய ஈக்விட்டிகள் மீதான தரத்தை சமீபத்தில் குறைத்தது. இந்த நிலையில் இது சந்தையில் பெரும் ஏற்ற இறக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவனிக்க வேண்டிய சர்வதேச காரணிகள்

கவனிக்க வேண்டிய சர்வதேச காரணிகள்


ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி சரிவில் காணப்பட்டாலும், எதிர்பார்ப்பினை விட வளர்ச்சி கண்டு வருவதாக நிபுனர்கள் கூறுகின்றனர். கொரோனாவின் காரணமாக சப்ளை சங்கிலி பாதிக்கப்பட்டதையடுத்து தொழில்துறையானது சரிவினைக் கண்டு இருந்தது. மேலும் நுகர்வும் குறைந்திருந்தது. ஆனால் தற்போது கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது.

கொரோனா பரவல் அச்சம்

கொரோனா பரவல் அச்சம்

தற்போது உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனா தாக்கம் என்பது பல நாடுகளிலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. இதற்கிடையில் தடுப்பூசிகளும் வேகமாக போடப்பட்டு வரும் நிலையில், ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது மேற்கொண்டு பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற கருத்து நிலவி வருகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 155.13 புள்ளிகள் அதிகரித்து, 60,841.82 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 132.80 புள்ளிகள் அதிகரித்து, 17,970 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 230.41 புள்ளிகள் அதிகரித்து, 60,917.10 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 73.20 புள்ளிகள் அதிகரித்து, 18,176 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1,324 பங்குகள் ஏற்றத்திலும், 624 பங்குகள் சரிவிலும், 106 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ மெட்டல்ஸ் தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. பிஎஸ்இ ஹெல்த்கேர் மட்டும் 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது. மற்ற அனைத்து குறியீடுகளும் 1% கீழாக ஏற்றத்தில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓ.என்.ஜி.சி, ஹீரோ மோட்டோ கார்ப், ஐடிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே கோல் இந்தியா, ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், பஜாஜ் பின்செர்வ், பிபிசிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஐடிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, கோடக் மகேந்திரா, எம்& எம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 252.22 புள்ளிகள் அதிகரித்து, 60,938.91 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 75.30 புள்ளிகள் அதிகரித்து, 18,178.05 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
ஆட்டோ துறை, பார்மா, ஆயில் & கேஸ் துறை சார்ந்த பங்குகள் ஏற்றம் கண்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+