நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. கடந்த வாரத்தில் பலத்த சரிவினைக் கண்டிருந்த நிலையில், இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்றே ஆறுதலை கொடுத்துள்ளது.
இது அமெரிக்க அரசு 1.9 டிரில்லியன் டாலர் ஊக்கத்தொகைக்கு உறுதி அளித்துள்ள நிலையில், ஆசிய சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகிறது. அதோடு வலுவான பே ரோல் குறித்தான அறிக்கையானது ,பொருளாதாரம் மீண்டு வருவதையே சுட்டிக் காட்டுகின்றது. ஆக சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.
இதோடு கடந்த பிப்ரவரி மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி 155% அதிகரித்துள்ளது. இதுவும் சந்தை ஏற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 405.27 புள்ளிகள் அதிகரித்து, 50,810.59 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 129.40 புள்ளிகள் அதிகரித்து, 15,067 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 282.54 புள்ளிகள் அதிகரித்து, 50,687.86 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 77.90 புள்ளிகள் அதிகரித்து, 15,016 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள கெயில், ஓஎன்ஜிசி, யுபிஎல், கோல் இந்தியா, ஐஓசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் ஆட்டோ, அல்ட்ராடெக் சிமெண்ட், ஏசியன் பெயிண்ட்ஸ், பிரிட்டானியா, நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, லார்சன், ஆக்ஸிஸ் வங்கி, என்டிபிசி, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே, பஜாஜ் ஆட்டோ, அல்ட்ராடெக் சிமெண்ட், ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்டில், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73 ரூபாய்க்கு மேலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு வரவிருக்கும் நாட்களில் 73.80 ரூபாய் என்ற லெவலில் இருக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 553.67 புள்ளிகள் அதிகரித்து, 50,958.99 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 158.25 புள்ளிகள் அதிகரித்து, 15,096.35 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications