முதல் நாளே லாபம் தான்.. சென்செக்ஸ் 54,400 மேல் ஏற்றம்..!

நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. கடந்த வாரம் முதல் கொண்டே தொடர்ந்து புதிய உச்சத்தினை எட்டி வரும் நிலையில், இன்றும் சற்று ஏற்றம் கண்டுள்ளது. இது முதலீட்டாளர்கள் நல்ல லாபம் என்றே கூறலாம்.

இது அமெரிக்க சந்தைகள் கடந்த அமர்வில் வரலாற்று உச்சத்தில் முடிவடைந்த நிலையில், ஆசிய சந்தைகள் சிலவும் தொடர்ந்து ஏற்றத்தில் காணப்படுகின்றன.

இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் தொடர்ந்து ஏற்றத்தில் காணப்படுகிறது. குறிப்பாக வெளியாகி வரும் டேட்டாக்கள் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளதையே காட்டுகின்றது. குறிப்பாக வேலை சந்தையானது வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது சந்தைக்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

சந்தைக்கு சாதகமான காரணிகள்

சந்தைக்கு சாதகமான காரணிகள்

தொடர்ந்து முந்தைய 3 அமர்வுகளாகவே புதிய உச்சத்தினை தொட்டு வரும் சந்தையானது, இன்று எந்தளவுக்கு ஏற்றம் காணுமோ என்ற கேள்வி எழுந்தாலும், நிபுணர்கள் நீண்டகால நோக்கில் சந்தையானது இன்னும் ஏற்றம் காணும் என்றே கூறி வருகின்றனர். இதற்கிடையில் அமெரிக்க டாலரின் மதிப்பும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. அதோடு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தில் இன்று வரையில் மாற்றம் செய்யவில்லை. இதுவும் சந்தைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 72.54 புள்ளிகள் அதிகரித்து, 54,350.26 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 75.80 புள்ளிகள் அதிகரித்து, 16,314 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 186 புள்ளிகள் அதிகரித்து, 54,464 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 62 புள்ளிகள் அதிகரித்து, 16,300 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றது. மற்ற குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பஜாஜ் பின்செர்வ், எம்&எம், டைட்டன் நிறுவனம், பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹிண்டால்கோ, டாடா கன்சியூமர் புராடக்ட்ஸ், டிவிஸ் லேப், ரிலையன்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பின்செர்வ், எம்&எம், டைட்டன் நிறுவனம், இந்தஸிந்த் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ரிலையன்ஸ், பார்தி ஏர்டெல், ஹெச்.சி.எல டெக், டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று குறைந்து, 74.22 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 74.15 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 154.98 புள்ளிகள் அதிகரித்து, 54,432.70 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 43.95 புள்ளிகள் அதிகரித்து, 16,276.90புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+