நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் தொடங்கியது முதலே சரிவில் காணப்படுகின்றன.
இது கடந்த அமர்வில் அமெரிக்க பங்குச் சந்தையானது சற்று ஏற்றத்தில் முடிவடைந்த நிலையில், டாலரின் மதிப்பும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது.
இதற்கிடையில் அமெரிக்காவின் பத்திரம் வாங்குதல் நடவடிக்கையானது நவம்பர் மாதத்திலிருந்து படிப்படியாக அடுத்த ஆண்டு இறுதிக்குள் முழுவதும் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சரியான காலம் அல்ல
இதற்கிடையில் ரிசர்வ் வங்கியின் ஜெரோம் பவல் வட்டி விகிதம் குறைப்பு பற்றி, இது வட்டியைக் மாற்றம் செய்வதற்கான சரியான காலம் அல்ல, என்று கூறியிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் இன்னும் கவனமுடன் இருக்க காரணமாக அமைந்துள்ளது. இது பொருளாதாரம் இன்னும் முழுமையான வளர்ச்சி பாதைக்கு திரும்பவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றது.
சீனாவின் நிலை
அதேபோல சீனாவின் எவர்கிராண்டே உள்ளிட்ட பல நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், இதுவும் சீனாவின் பொருளாதாரமும் மெதுவான வளர்ச்சி நிலையை கண்டு வருவதையே சுட்டிக் காட்டுகின்றது. இதனை ஊக்குவிக்கும் விதமாக அக்டோபர் மாத ஏற்றுமதி குறித்தான தரவானது அதிகரித்து இருந்தாலும், செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது சரிவிலேயே காணப்படுகிறது. இது கடும் மின்வெட்டு, நிலக்கரி பற்றாக்குறை, கொரோனா தாக்கம், கொரோனாவால் முழு லாக்டவுன் உள்ளிட்ட பலவும் இன்னும் பொருளாதார வளர்ச்சியினை பாதிப்பினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் பற்றிய கவலை
மேலும் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாத நிலையில், இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் எதிரொலியும் சந்தையில் இருக்கலாம் என்ற கவலையும் இருந்து வருகிறது. குறிப்பாக ஜெரோம் பவல் கூறியிருப்பது சர்வதேச அளவில் பங்கு சந்தைகளில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியாகவிருக்கும் காலாண்டு முடிவுகள்
நடப்பு வாரத்தில் 2,100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளன. குறிப்பாக பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் அரபிந்தோ பார்மா, போஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பவர் கிரிட் கார்ப்பரேஷன், பேங்க் ஆப் பரோடா, சோமேட்டோ உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களும் இந்த தனது காலாண்டு அறிக்கையை வெளியிட உள்ளன.
கொரோனா பரவல் அச்சம்
தற்போது உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனா தாக்கம் என்பது, மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. இது இதற்கிடையில் தடுப்பூசிகளும் வேகமாக போடப்பட்டு வரும் நிலையில், ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது மேற்கொண்டு பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. இப்படி பல காரணிகளும் மத்தியில்தான் இந்திய சந்தை ஏற்றத்தில் தொடங்கினாலும், தற்போது சரிவில் காணப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 140.55 புள்ளிகள் அதிகரித்து, 60,208.17 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 50.20 புள்ளிகள் அதிகரித்து, 17,967 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 201.32 புள்ளிகள் அதிகரித்து, 60,268.94 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 43.20 புள்ளிகள் அதிகரித்து, 17,960 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1488 பங்குகள் ஏற்றத்திலும், 659 பங்குகள் சரிவிலும், 145 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றது. மற்ற குறியீடுகள் மாற்றமின்றி காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட், கிரசிம், ஈச்சர் மோட்டார்ஸ், டைட்டன் நிறுவனம், ஸ்ரீ சிமெண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இந்தஸ் இந்த் வங்கி, டிவிஸ் லேப், ரிலையன்ஸ், ஹிண்டால்கோ, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட், டைட்டன் நிறுவனம், டெக் மகேந்திரா, பார்தி ஏர்டெல், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இந்தஸ்இந்த் வங்கி, ரிலையன்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், எம் & எம், ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 237.16 புள்ளிகள் குறைந்து, 59,830.46 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 64.15 புள்ளிகள் குறைந்து, 17,870 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
ஆட்டோ துறை சார்ந்த பங்குகள் ஏற்றம் கண்டுள்ள நிலையில், பார்மா பங்குகள் சரிவில் காணப்படுகின்றது.
India's benchmark indices open higher on mixed global cues, sensex trade above 59,800, nifty trade at 17,870/ முதல் நாளே குழப்பம் தான்.. ஏற்றத்தில் தொடங்கி சரிவில் வர்த்தகமாகும் சென்செக்ஸ், நிஃப்டி..!
More From GoodReturns

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!



Click it and Unblock the Notifications