நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றே, இந்திய சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் என்பது தற்போது குறையத் தொடங்கியிருந்தாலும், பலவீனமான சர்வதேச காரணிகள் பலவற்றிற்கும் மத்தியில் சந்தைகள் சரிவிலேயே தொடங்கியுள்ளது.
கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவில் முடிவடைந்ததையடுத்து, இன்று காலையில் ஆசிய சந்தைகளும் சரிவில் தான் காணப்பட்டன.
இதனையடுத்து இந்திய சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன. இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக கச்சா எண்ணெய் விலையும் மிக மோசமான ஏற்றத்தினை கண்டு வருகின்றது. இது ரூபாய் வீழ்ச்சிக்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தைக்கு எதிராக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சரிவில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 246.83 புள்ளிகள் குறைந்து, 52,097.62 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 104.10 புள்ளிகள் குறைந்து, 15,579.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 524.97 புள்ளிகள் குறைந்து, 51,819.48 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 164.90 புள்ளிகள் குறைந்து, 15,518.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 552 பங்குகள் சற்று ஏற்றத்திலும், 1421 பங்குகள் சரிவிலும், 88 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள என்.டி.பி.சி, அதானி போர்ட்ஸ், ஒ.என்.ஜி.சி, ஹெச்.யு.எல், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே யுபிஎல், எம்&எம், விப்ரோ, டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள என்.டி.பி.சி, ஹெச்.யு.எல், ஒ.என்.ஜி.சி, சன் பார்மா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எம்&எம், லார்சன், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, மாருதி சுசூகி, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
இந்திய சந்தைகள் இன்று சற்று சரிவில் காணப்பட்டாலும், மீண்டும் விரைவில் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. இது பொருளாதாரம் விரைவில் மீண்டு வர வழிவகுக்கும். இதுவும் சந்தைக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 347.26 புள்ளிகள் குறைந்து, 51,997.19 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 107.95 புள்ளிகள் குறைந்து, 15,575.40 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications