முதல் நாளே வீழ்ச்சி தான்.. தொடரும் ஏற்ற இறக்கம்.. சென்செக்ஸ், நிஃப்டி என்ன நிலவரம்..!

நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் தொடங்கி, சரிவிலேயே காணப்படுகின்றன.

இது கடந்த அமர்வில் அமெரிக்க பங்குச் சந்தையானது சரிவில் முடிவடைந்த நிலையில், இன்று ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்படுகின்றன.

கடந்த அமர்வில் சென்செக்ஸ் கிட்டதட்ட 1800 புள்ளிகள் உச்சத்தில் இருந்து வீழ்ச்சி கண்டது. இதே நிஃப்டி 17,000 என்ற லெவலில் காணப்பட்டது. அதனை தொடர்ந்து இன்றும் சரிவில் காணப்படுகின்றது.

ஜியோ கட்டண அதிகரிப்பு

ஜியோ கட்டண அதிகரிப்பு

சமீபத்தில் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கட்டணங்களை அதிகரித்த நிலையில், அதனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் 20 சதவீத கட்டண அதிகரிப்பினை செய்துள்ளது. இதற்கிடையில் ரிலையன்ஸ், ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் கவனிக்க வேண்டி உள்ளது.

கொரோனா பரவல் அச்சம்

கொரோனா பரவல் அச்சம்

உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனா தாக்கம் என்பது, மீண்டும் பல ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. குறிப்பாக பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் மேற்கொண்டு அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் நவம்பர் 26 நிலவரப்படி, 5,785.83 கோடி ரூபாயாக பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதே உள்நாட்டு நிபுணர்கள் 2,294.11 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இது அதிகளவிலான சரிவினை தடுத்திருக்கலாம் என்றாலும், இந்த முதலீடு வெளியேற்றம் என்பது வரும் நாட்களில் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சரிவில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 448.15 புள்ளிகள் குறைந்து, 56,659 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 429.70 புள்ளிகள் குறைந்து, 16,596.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 233.04 புள்ளிகள் குறைந்து, 56,874.11 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 91.50 புள்ளிகள் குறைந்து, 16,935 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 683 பங்குகள் ஏற்றத்திலும், 1,246 பங்குகள் சரிவிலும், 94 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ ஸ்மால்கேப், பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பி.எஸ்.இ உள்ளிட்ட குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றது. மற்ற குறியீடுகள் மாற்றமின்றி காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், ஹிண்டால்கோ, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், இந்தஸிந்த் வங்கி, ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹீரோ மோட்டோகார்ப், அதானி போர்ட்ஸ், யுபிஎல், ஸ்ரீ சிமெண்ட்ஸ், ஹெச்.டிஎஃப்.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், இந்தஸிந்த் வங்கி, ஹெச்.சி.எல் டெக், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், பஜாஜ் ஆட்டோ, ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே நெஸ்டில், ஹெச்.டி.எஃப்.சி, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

ஆரம்பத்தில் சரிவில் தொடங்கிய பங்குசந்தைகள், தற்போது சென்செக்ஸ் 176.42 புள்ளிகள் அதிகரித்து, 57,283.57 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 56.55 புள்ளிகள் அதிகரித்து, 17,083 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

இன்று ரிலையன்ஸ், வாகன துறை சார்ந்த பங்குகள், அதானி போர்ட்ஸ் கவனிக்க வேண்டிய பங்குகளாக உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+