நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, வர்த்தகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக இந்திய சந்தைகள் இன்று மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன.
பல்வேறு சாதகமான காரணிகள் சந்தைக்கு எதிராக இருந்தாலும், கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் உச்சத்தினை தொட்ட நிலையில், இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் உச்சத்தில் காணப்பட்டன.
இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது இன்னும் சற்று ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
கவனிக்க வேண்டிய காரணிகள்
அமெரிக்க டாலரின் மதிப்பானது சற்று அழுத்ததில் காணப்படும் நிலையில், வட்டி விகிதத்தினை விரைவில் மத்திய வங்கிகள் கடுமையாக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது. இதற்கிடையில் சீனாவின் மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி விகிதம் மெதுவான வேகத்தில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கொரோனா பெருந்தொற்று, சீனாவின் மின்வெட்டு, மத்திய வங்கிகள் பாலிசிகள் கடுமையாக்கல் உள்ளிட்ட பலவும் கவனிக்க வேண்டிய காரணிகளாக உள்ளன.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 384.39 புள்ளிகள் அதிகரித்து, 61,690.34 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 244.80 புள்ளிகள் அதிகரித்து, 18,583.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 433.40 புள்ளிகள் அதிகரித்து, 61,739.35 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 132.00 புள்ளிகள் அதிகரித்து, 18,470.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1726 பங்குகள் ஏற்றத்திலும், 422 பங்குகள் சரிவிலும், 111 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன. பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ டெக், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ ஸ்மால் கேப், பேங்க் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதே நிஃப்டி பிஎஸ்இ 2% மேலாகவும், பிஎஸ்இ மெட்டல்ஸ் 3% மேலாகவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹிண்டால்கோ, டாடா மோட்டார்ஸ், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், ஓ.என்.ஜி.சி, ஐஓசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஈச்சர் மோட்டார்ஸ், ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டைட்டன் நிறுவனம், டாடா ஸ்டீல், இன்ஃஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஹெச்.சி.எல் டெக், பஜாஜ் ஆட்டோ, ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 441.04 புள்ளிகள் அதிகரித்து, 61,746.99 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 147.95 புள்ளிகள் அதிகரித்து, 18,486.50 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
தற்போது பல நிறுவனங்களும் மூன்றாவது காலாண்டு அறிக்கையினை சாதகமாக வெளியிட்டு வரும் நிலையில், இதுவும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது.
More From GoodReturns

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications