நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் தொடங்கின. எனினும் தற்போது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.
இது அமெரிக்க ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் உள்பட பல அதிகாரிகள், தர்போதைக்கு நாணயக் கொள்கையில் மாற்றம் இருக்காது என்று வேறு வேறு வழிகளில் உறுத்திபடுத்தியதையடுத்து, டாலரின் மதிப்பானது உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.
இதனையடுத்து ஆசிய சந்தைகளும் சற்று ஏற்றத்தில் தொடங்கின. இதற்கிடையில் தான், இந்திய சந்தையும் ஏற்றத்தில் தொடங்கி, பின் சரிவில் காணப்படுகிறது.
முக்கிய காரணிகள்
கொரோனாவின் தாக்கம் சரியத் தொடங்கியுள்ள நிலையில் இது சந்தைக்கு சாதகமான விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. அதோடு தற்போது லாக்டவுனிலும் பற்பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. எனினும் தற்போதைய இந்த தடுமாற்றம் புராபிட் புக்கிங் காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருத்துகின்றனர்.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 284.66 புள்ளிகள் அதிகரித்து, 52,873.37 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 86.70 புள்ளிகள் அதிகரித்து,15,859.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 151.16 புள்ளிகள் அதிகரித்து, 52,739.87 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 50.40 புள்ளிகள் குறைந்து, 15,823.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1608 பங்குகள் அதிகரித்தும், 429 பங்குகள் சரிவிலும், 78 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகளும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. எனினும் பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ், பிஎஸ்இ டெக், பிஎஸ்இ ஆயில் & கேஸ் உள்ளிட்டவை சரிவில் காணப்படுகின்றதன.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப், ஹிண்டால்கோ, மாருதி சுசூகி, இந்தஸிந்த் வங்கி, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே அதானி போர்ட்ஸ், யுபிஎல், ஸ்ரீ சிமெண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள மாருதி சுசூகி, பஜாஜ் பைனான்ஸ், இந்தஸிந்த் வங்கி, எம்&எம், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே கோடக் மகேந்திரா, ஹெச்.சி.எல் டெக், டிசிஎஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 10 பைசா அதிகரித்து, 74.26 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இது முந்தைய அமர்வில் 74.36 ரூபாயாக முடிவுற்று இருந்தது.
தற்போது சென்செக்ஸ் 18.63 புள்ளிகள் சரிந்து, 52,570.08 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 1.85 புள்ளிகள் சரிந்து, 15,770.90 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications